Tax Evasion Penalty: வருமான வரி சட்டத்தின் கீழ் அனைவரும், அவரவர் வருமானத்திற்கு ஏற்ப, வரி விதிப்பின் கீழ் வந்தால் வரிகளை செலுத்த வேண்டும். சட்டத்திற்கு விரோதமாக வரி ஏய்ப்பில் ஈடுபடுவது குற்றமாகும். இது கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும். சிலர் வரி ஏய்ப்பு செய்ய பல வழிகளில் முயற்சி செய்கிறார்கள்.
Tax Payers Alert: வரி ஏய்ப்பு என்பது சட்டத்திற்குப் புறம்பாக, வரி செலுத்துவதைத் தவிர்ப்பதாகும். வருமானத்தை வெளிப்படுத்தாமல் இருத்தல் / மறைத்தல், விலக்குகளை மிகைப்படுத்திக்காட்டுதல் அல்லது போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வரி விலக்கு (Tax Exemption) கோருதல், தவறான வருமான வரி கணக்குகளை சமர்ப்பித்தல், வருமான வரி (Income Tax) கணக்கை தாக்கல் செய்யாமல் இருத்தல், பணப் பரிவர்த்தனைகளைப் பற்றி குறிப்பிடாமல் இருப்பது, வரி விதிக்கக்கூடிய வருவாயைக் குறைக்க கணக்குப் புத்தகங்களில் தவறான பதிவுகளைச் செய்வது அல்லது செலவுக் கழிவுகளை அதிகரிப்பது ஆகிய செயல்முறைகள் இதில் அடங்கும்.இவற்றுக்கு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில தண்டனைகள் பற்றி இங்கே காணலாம்.
அபராதம்: மதிப்பீட்டு அதிகாரியால் தீர்மானிக்கப்படுவதன் அடிப்படையில் நிலுவையில் உள்ள வரி (Tax) அளவு வரை அபராதம் விதிக்கப்படும்.
அபராதம்: வருமான வரி தாக்கல் (ITR Filing) செய்வதற்கான காலக்கெடுவிற்கு பிறகு ரிட்டன் தாக்கல் செய்தால் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும். மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கு குறைவாக இருந்தால் இது ரூ.1,000 ஆக குறைக்கப்படும்.
அபராதம்: வருமானத்தை (Income) குறைவாக காட்டியிருந்தால் 50 சதவிகித வரி, வருமானத்தை தவறாகக் காட்டி இருந்தால் 200 சதவீத அபராதம். வருமானத்தை குறைவாக காட்டுவதற்கான எடுத்துக்காட்டுகள்: செயலாக்கப்பட்ட ரிட்டர்ணை விட மதிப்பீட்டு வருமானம் அதிகமாக இருந்தால், இழப்புகளை பற்றிய தவறான தகவல்கள் இருந்தால். தவறான தகவல்களை அளிப்பதற்கான எடுத்துக்காட்டுகள்: உண்மையான தகவல்களை தவறான முறைகளில் வழங்குவது, முதலீடுகளைப் பதிவு செய்யாமல் இருப்பது, செல்வினங்களுக்கான க்ளெய்ம்களில் ஆதாரம் இல்லாமல் இருப்பது போன்றவை.
அபராதம்: பதிவுகளை சரியாக பராமரிக்காவிட்டால் பிரிவு 44AA இன் படி ரூ.25,000 அபராதம் (Penalty) விதிக்கப்படும். சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு, அத்தகைய பரிவர்த்தனைகள் அல்லது குறிப்பிட்ட உள்நாட்டு பரிவர்த்தனைகளின் மதிப்பில் 2 சதவீதம்.
அபராதம்: கணக்குகளை தணிக்கை செய்யாமல் இருந்தால், மொத்த விற்பனை/விற்றுமுதல்/மொத்த ரசீதில் ரூ. 1,50,000 அல்லது 0.5 சதவீதம், இரண்டில் எது குறைவோ அது விதிக்கப்படும். வெளிநாட்டு பரிவர்த்தனைகள் தொடர்பான தணிக்கை அறிக்கைகளை வழங்கத் தவறினால், ரூ. 1,00,000 அபராதம் செலுத்த வேண்டும்.
அபராதம்: வரித் தொகையை விட குறைவாக இருக்காது, ஆனால், வெளியிடப்படாத வருமானத்திற்கு விதிக்கபப்டும் வரியின் மூன்று மடங்கு தொகையை விட அதிகமாக இருக்காது.
அபராதம்: வரி செலுத்துவோர் (Taxpayers) வரி செலுத்த தவறியதாக மதிப்பீட்டாளராகக் கருதப்பட்டால், மதிப்பீட்டு அதிகாரியால் விதிக்கப்படும் அபராதம் பொருந்தும். அபராதம் நிலுவையில் உள்ள வரிக்கு மேல் இருக்காது.
வரி ஏய்ப்பு (Tax Evasion) என்பது வருமான வரிச் சட்டம் ( Income Tax Act ) 1961 இன் கீழ் தண்டனைக்குரிய ஒரு கடுமையான குற்றமாகும். அபராதங்கள் தானாகவே அல்லது வரி அதிகாரிகளின் விருப்பப்படி விதிக்கப்படலாம் என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது.