Health Is Wealth: பல்வேறு எண்ணெய்களைப் பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியம் உறுதி

Olis And Benefits: வெவ்வேறு ஊட்டச்சத்துக்களை பெறுவதற்காக நாம் பல்வேறு வகையிலான எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும்

ஆரோக்கியத்திற்கு அடிப்படையான உணவை தயாரிப்பதில் கவனம் செலுத்துவது உடல்நலத்தை மேம்படுத்தும். நாம் தினசரி பயன்படுத்தும் உணவுகளை, விதவிதமான எண்ணெய்களைக் கொண்டு தயாரிப்பதால் ஆரோக்கியம் மேம்படும்.

மேலும் படிக்க | முக சுருக்கக்களை மாயமாய் நீக்கும் ‘பாதாம் எண்ணெய்’ மசாஜ்!

1 /5

சமையலுக்கு எந்த எண்ணெய் சிறந்தது? எப்படி பயன்படுத்தலாம்? என பல கேள்விகள் எழுந்தாலும், வெவ்வேறு எண்ணெய்களில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நமக்கு கட்டாயம் தேவை. அரிசி தவிடு எண்ணெய் 254 டிகிரி செல்சியஸ் புகைப் புள்ளியைக் கொண்டுள்ளது. இதன் பொருள் அதிக வெப்பநிலையை தாங்கக்கூடியது என்பதாகும். இது பொறிக்கும் வகை உணவுகளை தயாரிக்கப் பயன்படுத்தலாம். அரிசி தவிடு எண்ணெயில் உள்ள ஆர்சினோல் இரத்த கொழுப்பைக் குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.

2 /5

நல்லெண்ணெயின் புகைப் புள்ளி 210 டிகிரி செல்சியஸ் ஆகும். ஊறுகாய் போடுவதற்கு மட்டுமல்ல சமையலுக்கும் பரவலாக பயன்படுத்தப்படும் நல்லெண்ணெய், எள்ளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. நல்ல மணம் கொண்ட எள் எண்ணெயை உணவில் சேர்த்து சுவையை அதிகரிக்கலாம்.

3 /5

தேங்காய் எண்ணெயில் அதிக புகைப் புள்ளி (171 டிகிரி செல்சியஸ்) இல்லை, எனவே அதிக வெப்பநிலையில் எண்ணெயை சூடாக்குவது தீங்கு விளைவிக்கும். அதிகம் சூடாக்கத் தேவையில்லாத உணவுகளுக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.  

4 /5

கடுகு எண்ணெய் தனித்துவமான சுவை கொண்டது. இது அதிக ஸ்மோக் பாயிண்ட் (254 டிகிரி செல்சியஸ்) கொண்ட கடுகு எண்ணெய், அதிக சூடாக்கினாலும் தீங்கு விளைவிக்காது. இதில் நல்ல கொழுப்பு அமிலம் இருப்பதால் சமையலுக்கு நல்லது.

5 /5

ஆலிவ் எண்ணெயில் அதிக புகைப் புள்ளி (207 டிகிரி செல்சியஸ்) உள்ளது. சாலட் டிரஸ்ஸிங்கிற்கு ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தவும். ஆனால் இந்திய உணவுகளை சமைக்க இதை பயன்படுத்த வேண்டாம் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.