நமது உடலில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளது. ஒன்று நல்லது, மற்றொன்று கெட்டது. கெட்ட கொலஸ்ட்ரால் மாரடைப்புக்கான மிக ஆபத்தான காரணமாக உள்ளது. மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கங்கள் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளன. இது தவிர, உடற்பயிற்சி செய்யாததாலும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் சில எளிய வழிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
முட்டை சாப்பிடுவதன் மூலம் கொலஸ்ட்ரால் கட்டுப்படும். இருப்பினும், பெரும்பாலான மக்கள் முட்டையின் மஞ்சள் பகுதியை சாப்பிடக்கூடாது என்று நினைக்கிறார்கள். உண்மையில், இதுகுறித்த பல வகையான வேறுபட்ட கருத்துகள் உள்ளன. ஆகையால், நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை முட்டைகளை சாப்பிடலாம். எனினும் மஞ்சள் பகுதியை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம்.
இது தவிர மீன் சாப்பிடுவதன் மூலமும் அதிகரித்த கொலஸ்ட்ரால் கட்டுக்குள் வரும். மீன்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் மூலம் கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால் மாரடைப்பு அபாயமும் குறைகிறது.
மேலும், உங்கள் உணவில் பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகள் அதிக அளவில் சேர்த்துக்கொள்ள மறக்கதீர்கள்.
உங்கள் உணவில் முழு தானியங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் அதிகரித்த உங்கள் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம். உங்கள் கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருந்தால், மாரடைப்பு அபாயத்தில் இருந்தும் பாதுகாப்பாக இருக்கலாம். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)