கெட்ட கொலஸ்ட்ரால் இருந்தால் இந்த ஆபத்தான நோய்களும் கூடவே வரும்: ஜாக்கிரதை

Bad Cholesterol: கெட்ட கொலஸ்ட்ரால் இரத்த நாளங்களின் சுவர்களில் படிகிறது. இதன் காரணமாக படிப்படியாக பிளேக் உருவாகிறது. இந்த பிளேக் இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. 

Bad Cholesterol: கொலஸ்ட்ராலை பலர் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். ஆனால், இது மிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். நரம்புகளில் கொலஸ்ட்ரால் படிவது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் காணப்படும் ஒரு வகை கொழுப்பு. இதன் அளவு அதிகரித்தால் அது இதயம் மற்றும் இரத்த நாளங்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். கொலஸ்ட்ரால் அதிகமானால் அதன் காரணமாக பல நோய்களின் ஆபத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

1 /9

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணமாக இந்த நாட்களில் பல வித நோய்கள் மனித குலத்தை பாடாய் படுத்துகின்றன. இவற்றில் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், உடல் பருமன் ஆகியவை பற்றி மிக அதிகமாக கேள்விப்படுகிறோம். நாளுக்கு நாள் இவற்றின் பிடியில் சிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.

2 /9

பிஸியான வாழ்க்கை முறையில் பலரிடம் பரவலாக காணப்படும் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறித்து இந்த பதிவில் காணலாம். இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் பிஸியான வாழ்க்கை முறை காரணமாக, கெட்ட கொலஸ்ட்ரால் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் காணப்படும் ஒரு வகை கொழுப்பு. இதன் அளவு அதிகரித்தால் அது இதயம் மற்றும் இரத்த நாளங்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். கொலஸ்ட்ரால் அதிகமானால் அதன் காரணமாக பல நோய்களின் ஆபத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

3 /9

கெட்ட கொலஸ்ட்ரால் (LDL Cholesterol) இரத்த நாளங்களின் சுவர்களில் படிகிறது. இதன் காரணமாக படிப்படியாக பிளேக் உருவாகிறது. இந்த பிளேக் இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. இதன் காரணமாக மாரடைப்பு, பக்கவாதம் போன்ற கடுமையான நோய்களின் அபாயம் அதிகரிக்கின்றது. உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால் உயிருக்கே ஆபத்தான நோய்களும் நம்மை ஆட்கொள்ளக்கூடும்.

4 /9

கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தை பெரிய அளவில் அதிகரிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். உடலில் அதிக அளவில் கெட்ட கொலஸ்ட்ரால் இருப்பது இதய நோய்க்கான மிகப்பெரிய காரணமாக அமைகின்றது. இது தமனிகளில் கடினத்தன்மையை ஏற்படுத்துகிறது. இதனால் இதயத்திற்கு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் வழங்கும் செயல்முறை பாதிக்கப்படுகின்றது. 

5 /9

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால், மூளையின் இரத்த நாளங்களையும் அது பாதிக்கிறது. இரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படும்போது, ​​அது பக்கவாதத்திற்கு வழிவகுக்கிறது. இது மூளைக்கு சேதம் விளைவிக்கும். சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இதன் மூலம் மரணமும் சம்பவிக்கலாம். 

6 /9

கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த, வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியது மிக அவசியமாகும். முதன்மையாக, ஆரோக்கியமான உணவுகளையே உட்கொள்ள வேண்டும். பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுவது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். 

7 /9

எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பது பற்றிய புரிதல் இருக்க வேண்டியதும் மிக அவசியம். இறைச்சி, பால் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் காணப்படும் நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகளை தவிர்ப்பது நல்லது. மீன், அக்ரூட் பருப்புகள் மற்றும் சியா விதைகள் போன்ற ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை உண்ணலாம். 

8 /9

கெட்ட கொழுப்பை குறைக்க மற்றொரு முக்கியமான விஷயம் தினமும் உடற்பயிற்சி செய்வதாகும். இதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கலாம். மேலும், ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பதும் மிக அவசியம். இரத்த நாளங்களை சேதப்படுத்தி கெட்ட கொழுப்பை அதிகரிக்கும் புகைபிடித்தல், மதுபானம் அருந்துதல் ஆகிய பழக்கங்களை கைவிட வேண்டும். மன அழுத்தத்தை நீக்க யோகா, தியானம் போன்றவற்றை தினமும் செய்வது நல்லது. 

9 /9

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.