ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை வணங்கி புத்தாண்டில் அடியெடுத்து வைப்போம்

புத்தாண்டு மலர்ந்து விட்டது. 2021ஆம் ஆண்டு அனைவருக்கும் எல்லா வகையில் புதிய மலர்ச்சியைக் கொடுக்கட்டும். நமசிவாயா வாழ்க, நாதன் தாள் வாழ்க, இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க என்று, ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமானின் திருவடிகளை வணங்கி புத்தாண்டைத் தொடங்குவோம்.  

திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகரால் சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளான சிவபெருமானைக் குறித்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இந்த திருவெம்பாவை பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பாடல்களையும் இணைத்து மார்கழி மாதத்தில் பாடுவது மரபு. கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருப்பார்கள். அப்போது திருவெம்பாவை பாடல்களையும் பாடுவார்கள். 

மாணிக்கவாசகர் திருவண்ணாமலையை தரிசிக்கும்போது பாடப் பெற்றது திருவெம்பாவை. சிவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது திருவெம்பாவை. திருவெம்பாவைக்குச் சிறப்பாக விளங்குவது "எம்பாவாய்" என்னும் தொடர்மொழி. இருபது பாடல்களிலும் பாட்டின் இறுதியில் வருவதால் அதுவே இதற்குப் பெயராய் அமைந்தது. 

Also Read | அன்னையின் தரிசன உலா... 

1 /7

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என் னேஎன்னே ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்!

2 /7

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம் பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் சீசி இவையுஞ் சிலவோ விளையாடி ஏசும் இடமீதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும் தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள் ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்!

3 /7

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம் உள் நெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயேவந்து எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்!

4 /7

மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம் போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய் ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் கோலமும் நம்மைஆட் கொண்டருளி கோதாட்டுஞ் சீலமும் பாடிச் சிவனே சிவனேஎன்று ஓலம் இடினும் உணராய் உணராய்காண் ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்!

5 /7

மானேநீ நென்னலை நாளைவந் துங்களை நானே எழுப்புவன் என்றலும் நாணாமே போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ வானே நிலனே பிறவே அறிவரியான் தானேவந் தெம்மைத் தலையளித் தாட்கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய் ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும் ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்!

6 /7

அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர் உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய்திறப்பாய் தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய் என்னானை என்அரையன் இன்னமுதென் றெல்லோமுஞ் சொன்னோங்கேல் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால் என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்!

7 /7

உலக ‎அளவில் ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் ‎புனிதப்பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம் ‎சபரிமலை என்று கூறப்படுகிறது. புத்தாண்டு தினத்தன்று எந்த  கோவிலுக்கும் போவதற்கு முன் வீட்டில் இருந்தே சபரிமலை ஐயப்பனின் அருளாசியைப் பெறுவோம்....