Food For Blood: ரத்தத்தை சட்டுன்னு அதிகரிக்க இந்த பழங்களை டயட்ல சேர்த்துக்கோங்க

Blood Boosting Fruits: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடலில் போதுமான அளவு ரத்தம் இருக்க வேண்டும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எனபப்டும் சிவப்பணுக்குள் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த உற்பத்தி குறையும்.

எனவே, ரத்தத்தை உருவாக்கும் உணவுகளை உண்ண வேண்டும். ரத்தம் உருவாகும் செயல்முறையை ஊக்கப்படுத்தும் பழங்கள் இவை.  

1 /10

ரத்தம் எங்கு எப்படி உற்பத்தியாகும்? நமது எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன

2 /10

இரும்புச்சத்து அதிகம் உள்ள உலர் திராட்சை ரத்த உற்பத்தியை ஊக்குவிக்கிறது

3 /10

இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியும் இதில் அதிகமாகக் கிடைக்கும். வைட்டமின் மற்றும் மினரல் நிறைந்த இந்தப் பழம் நரம்புத்தளர்ச்சியைப் போக்கும் என்பதோடு, இதில் கால்சியம் இருப்பதால் எலும்பு மற்றும் பற்களுக்கு நல்லது. 

4 /10

நரம்புகள் பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும் தேவையான சத்துக்கள் பெர்ரி பழங்களில் உள்ளன

5 /10

திராட்சையை பழமாகவும், உலர் பழமாகவும் உண்டால் உடலில் ரத்தம் விருத்தியாகும்

6 /10

ரத்தத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யும் பழங்களில் மாதுளைக்கு முதலிடம் உண்டு. மாதுளையை பழமாகவும், ஜூஸாகவும் எடுத்துக் கொள்ளலாம்

7 /10

ரத்தஅழுத்தத்தையும் சரிசெய்யும் தர்பூசணியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்த குறைபாடு ஏற்படாது. வைட்டமின் ஏ, தாதுக்கள், நார்ச்சத்து ஆகியவை அதிகமாக உள்ள தர்பூசணியில் 90 சதவிகிதம் தண்ணீர், 7 சதவிகிதம் கார்போஹைட்ரேட், 0.24 மில்லி கிராம் இரும்புச்சத்துக்கள் உள்ளன.

8 /10

ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் அத்திப்பழம் ஒரு அருமருந்து என்று சொல்லலாம். குறிப்பாக இரத்த விருத்திக்கு தேவைப்படும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் அத்தியில் உள்ளது. இதை உலர்பழமாகவும் உண்ணலாம்

9 /10

பாதாமி பழம் என்றும் அழைக்கப்படும் ஆப்ரிகாட், அளப்பரிய ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. இது ரத்தத்தை விருத்தி செய்யும் அனைத்து பண்புகளையும் கொண்டது.

10 /10

நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து என ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ள 100 கிராம் கொய்யாவில் 210 மில்லி கிராம் வைட்டமின் சி உள்ளது. இரும்புச்சத்தை கிரகிக்க வைட்டமின் சி மிகவும் அவசியம்.