Early Dinner Health Benefits: இரவு நேர உணவை மாலை 7 மணிக்கு முன்னரே நீங்கள் சாப்பிட்டு பழகிக்கொண்டால் உங்களின் உடல்நலனின் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் கிடைக்கும் பலன்கள் ஆகியவற்றை இதில் காணலாம்.
இரவு உணவு என்பது மிக முக்கியமானது. ஆனால், பலரும் அதனை சாப்பிட்ட உடன் தூங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதில் உடல்நலனில் சில பாதிப்புகளை ஏற்படுத்தும்.
ரத்த சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தம்: உணவை சீக்கிரம் சாப்பிடுவதால், தூங்குவதற்கு முன் கார்போஹைரேட்களை பதப்படுத்துவதிலும், அதனை வளர்சிதை மாற்றம் புரியவும் அதிக நேரம் இருக்கும். எனவே, ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும். மேலும் உணவை சீக்கிரம் உண்பதன் மூலம் உணவை செரிமானம் செய்யவும், தூங்குவதற்கு முன் ரிலாக்ஸாகவும் நேரம் கிடைக்கும்.
இதய நோய்க்கு எதிராக...: சீக்கிரமாக உணவு உண்டு பழக்கிக்கொண்டால் இதய நோய் வரும் அபாயம் குறையும் என தெரிவிக்கப்படுகிறது. ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும் காரணத்தால் என கூறப்படுகிறது.
வளர்சிதை மாற்றம்: இரவு உணவை விரைவாக உண்பதன் மூலம் உடல் உறுப்புகள் சீராக இயங்கும். மேலும், இதனால் வளர்சிதை மாற்றமும் சீராக இருக்கும்.
தரமான தூக்கம்: தூங்கும்போது வயிறு லேசாக இருந்தால் தூக்கம் நன்றாக இருக்கும். சீரான தூக்கம் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
செரிமானம் சீராகும்: சீக்கிரமாகவே உண்பதன் மூலம் உங்களுக்கு செரிமானம் ஆகவும் போதுமான நேரம் கிடைக்கும். இதனால் ஊட்டச்சத்துகள் உங்களுக்கு சரியாக கிடைக்கும். மேலும், செரிமான பிரச்னையும் சீராகும்.
உடல் எடை: சீக்கிரம் சாப்பிடுவதன் மூலம் கலோரிகள் குறையே அதிக நேரம் இருக்கும். இதனால் உடல் எடை குறைக்கும் முயற்சியிலும் பலன் கிடைக்கும், அதிகமாகவும் சாப்பிட தோன்றாது.
பொறுப்பு துறப்பு: இவை பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.