Changes From 2024: டிசம்பர் மாதம் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், புத்தாண்டு பல மாற்றங்களை கொண்டு வரப்போகிறது. நமது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் ஒருபுறம், சமூக வாழ்க்கையில், நமக்கு சேவை வழங்கும் வங்கிகள் முதல் அரசுத் துறை வரை சில மாற்றங்கள் ஏற்படவிருக்கின்றன.
டிசம்பர் 31 ஆம் தேதிக்குப் பிறகு சில சேவைகளின் விதிமுறைகள் மாறுகின்றன. எனவே அவற்றை தெரிந்துக் கொண்டு மாற்றங்களுக்கான நமது தரப்பு செயல்பாடுகளை செய்து முடிக்க வேண்டும்.
5 முக்கியமான பணிகளை டிசம்பர் 31 க்கு முன் உடனடியாக முடிக்கவும், ஏனென்றால், பல சேவைகளுக்கான விதிகள் ஜனவரி ஒன்று முதல் மாறுகின்றன
இன்னும் ஒரே வாரத்தில் புத்தாண்டு பிறக்க இருக்கிறது. பல்வேறு சேவைகளுக்கான விதிமுறைகள், கட்டணங்கள் மாறவிருப்பதாக, பல மாதங்களுக்கு முன்னரே தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது.
ஜனவரி முதல் மாறும் சேவைகளில் முக்கியமானவற்றை பற்றி பலருக்கும் தெரிந்திருந்தாலும், அதற்கான மாற்றங்களை செய்துவிட்டார்களா என்று தெரியவில்லை
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) படி, வங்கிகளில் லாக்கர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, திருத்தப்பட்ட லாக்கர் ஒப்பந்தங்களைச் சமர்ப்பிக்க டிசம்பர் 31, 2023 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வங்கிக்குச் சென்று ஒப்பந்தத்தை புதுப்பிக்கவேண்டும். புதிய ஒப்பந்தம் போடாவிட்டால், லாக்கரை காலி செய்ய வேண்டியிருக்கும்.
வருமான வரித் துறையானது ஜூலை 31, 2023 அன்று வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதியாக நிர்ணயித்துள்ளது, பல வரி செலுத்துவோர் இந்த வேலையை இன்னும் முடிக்கவில்லை. 31 டிசம்பர் 2023க்குள் தாமதம் ஆனதற்கான அபராதக் கட்டணத்துடன் புதுப்பிக்கப்பட்ட ITR ஐ தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், ஜனவரி 1 முதல் கூடுதல் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
Google Pay, Paytm, Phone Pay போன்ற கட்டண செயலிகளில் ஒரு வருடத்திற்கு செயலில் இல்லாத யுபிஐ ஐடிகள் (UPI ID) மூடப்படும். நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் (NPCI) உத்தரவுப்படி, இந்த நடடிக்கை எடுக்கப்படும். எனவே, யூபிஐ மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் தங்கள் ஐடியை டிசம்பர் 31 வரை செயல்படுத்திக் கொள்ளலாம்
டிமேட் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் ஜனவரி 1, 2024க்குள் தங்கள் கணக்கில் நாமினி பெயரை சேர்க்க வேண்டும். டிமேட் கணக்கு வைத்திருப்பவர்கள் இதை செய்யத் தவறினால், அவர்களால் பங்குகளில் பரிவர்த்தனை செய்ய முடியாது என்பதை செபி கட்டாயமாக்கியுள்ளது. அவ்வாறு செய்வதற்கான காலக்கெடு முன்னதாக செப்டம்பர் 30 ஆக இருந்தது, அது மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு, டிசம்பர் 31 உடன் முடிவடைகிறது