Pension News Update: அதிக ஓய்வூதியம் பெற விருப்பம் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மத்திய அரசு சார்பில், அதிக ஓய்வூதியத்தை தேர்வு செய்ய ஊழியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
இந்த விருப்பம் உங்களுக்கும் இருந்து இதற்கான தேர்வை நீங்கள் இன்னும் செய்யவில்லை என்றால், உங்களுக்கு இதை செய்ய இன்னும் 10 நாட்கள் உள்ளன. இபிஎஃப்ஓ தனது சந்தாதாரர்களுக்கு அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு வேலை வழங்குனருடன் கூட்டு விருப்ப படிவத்தை நிரப்ப ஆன்லைன் வசதியை வழங்கியுள்ளது.
அதிக ஓய்வூதியத்திற்கான தேர்வை செய்வதற்கான காலக்கெடுவை அரசாங்கம் இரண்டாவது முறையாக நீட்டித்துள்ளது. முதலில் இதற்கான காலக்கெடு 3 மே 2023 ஆக இருந்தது, இப்போது அது 26 ஜூன் 2023 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதிக ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க ஊழியர்களுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. ஆகையால் இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஊழியர்கள் இதற்கான பணிகளை விரைவாக செய்ய வேண்டும்.
அதிக ஓய்வூதியத்திற்கான தேர்வை செய்த பிறகு, தற்போது, கூடுதல் பங்களிப்பின் விருப்பம் எவ்வாறு செயல்படும் மற்றும் அதிக ஓய்வூதியத்தைத் தேர்வு செய்தால் பணம் செலுத்தும் முறை என்ன என்பது பற்றிய விஷயங்கள் இன்னும் தெளிவாக இல்லை.
இந்த உயர் ஓய்வூதியத் திட்டத்தில் அதிக தொகை கேட்கப்பட்டால், அந்த நிலையில், இதிலிருந்து வெளியேறுவதற்கான விருப்பம் கிடைக்குமா என்பது பற்றியும் உறுப்பினர்களிடம் எந்த தகவலும் இல்லை.
கூடுதல் தொகையை மண்டல அலுவலரே நிர்ணயம் செய்வார் என்றும், எவ்வளவு தொகை நிர்ணயம் செய்தாலும், அது குறித்த தகவல் வட்டியுடன் சேர்த்து அதிக ஓய்வூதியம் பெறும் பங்குதாரர்களுக்கு வழங்கப்படும் என்றும் சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் பெறுவோர்/உறுப்பினர்கள் பணத்தை டெபாசிட் செய்யவும், நிதி பரிமாற்றத்துக்கு ஒப்புதல் அளிக்கவும் மூன்று மாதங்கள் வரை அவகாசம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
15,000 அடிப்படை சம்பளத்தில் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு (EPS) மானியமாக 1.16 சதவீதத்தை அரசாங்கம் வழங்குகிறது. இபிஎஃப்ஓவின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் பணியாளர்கள் 12 சதவீதம் பங்களிக்கின்றனர். அதே நேரத்தில், முதலாளியின் 12 சதவீத பங்களிப்பில், 8.33 சதவீதம் இபிஎஸ்-க்கு செல்கிறது. மீதமுள்ள 3.67 சதவீதம் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு செல்கிறது.