NPS Pension: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி... புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது அரசு

National Pension System: ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் துறை, அக்டோபர் 7 அன்று ஒரு குறிப்பாணையை வெளியிட்டது. இது ஊழியர்களின் NPS பங்களிப்பு தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை விளக்குகிறது.

National Pension System: பங்களிப்பில் ஏதேனும் தவறு ஏற்பட்டால், அது பயனாளியின் ஓய்வூதியக் கணக்கில் வட்டியுடன் சேர்த்து டெபாசிட் செய்யப்படும் என்றும் புதிய வழிகாட்டுதலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. என்பிஎஸ் உறுப்பினர்கள் (NPS Members) எந்த வித நஷ்டத்தையும் எதிர்கொள்ளாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ப்ரொபேஷன் காலத்திலும் பங்களிப்பு கட்டாயம்: ஒரு ஊழியர் விடுப்பில் இருந்தாலோ, அல்லது ஊதியம் இல்லாமல் விடுப்பில் இருந்தாலோ, அவர் என்பிஎஸ் பங்களிப்பைச் (NPS Contribution) செய்யத் தேவையில்லை. மேலும், பணியாளர் வேறொரு துறை அல்லது வேறு நிறுவனத்திற்குச் சென்றால், அப்போது அவர் பங்களிப்பைச் செய்ய வேண்டும். இது தவிர, ப்ரொபேஷன் காலத்தில் பணிபுரியும் ஊழியர்களும் NPS பங்களிப்பைச் செய்வது கட்டாயமாகும்.

1 /10

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டத்தின் பங்களிப்பு குறித்து புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின் கீழ் பணிபுரியும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் துறை, அக்டோபர் 7 அன்று ஒரு குறிப்பாணையை வெளியிட்டது. இது ஊழியர்களின் NPS பங்களிப்பு தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை விளக்குகிறது.

2 /10

பங்களிப்பு அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்படும்: தற்போதுள்ள வழிகாட்டுதல்கள் பற்றிய தகவலும் இந்த குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இது NPS க்கு மாத சம்பளத்தில் 10 சதவீத பங்களிப்பு தேவைகளை குறிப்பிடுகிறது. 

3 /10

NPS தொகையானது அடுத்து வரும் முழுமையான ரூபாய் மதிப்பில் ரவுண்ட் ஆஃப் செய்யப்படும் என்றும், என்பிஎஸ் பங்களிப்புகள் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் துறையால் வெளியிடப்பட்ட குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

4 /10

இடைநீக்கத்திற்குப் பிறகும் பங்களிப்பைத் தொடரலாம்: ஒரு ஊழியர் இடைநீக்கம் செய்யப்பட்டால், அவர் NPS பங்களிப்பைத் தொடரும் வாய்ப்பு அவருக்கு அளிக்கப்படும். அதேசமயம் இடைநீக்கம் நீக்கப்பட்ட பிறகு அவர் பணியில் சேர்ந்தால், அந்த நேரத்தில் அவருடைய சம்பளத்தின் அடிப்படையில் பங்களிப்பு மீண்டும் கணக்கிடப்படும். 

5 /10

பங்களிப்பில் ஏதேனும் தவறு ஏற்பட்டால், அது பயனாளியின் ஓய்வூதியக் கணக்கில் வட்டியுடன் சேர்த்து டெபாசிட் செய்யப்படும் என்றும் புதிய வழிகாட்டுதலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. என்பிஎஸ் உறுப்பினர்கள் (NPS Members) எந்த வித நஷ்டத்தையும் எதிர்கொள்ளாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

6 /10

ப்ரொபேஷன் காலத்திலும் பங்களிப்பு கட்டாயம்: ஒரு ஊழியர் விடுப்பில் இருந்தாலோ, அல்லது ஊதியம் இல்லாமல் விடுப்பில் இருந்தாலோ, அவர் என்பிஎஸ் பங்களிப்பைச் (NPS Contribution) செய்யத் தேவையில்லை. மேலும், பணியாளர் வேறொரு துறை அல்லது வேறு நிறுவனத்திற்குச் சென்றால், அப்போது அவர் பங்களிப்பைச் செய்ய வேண்டும். இது தவிர, ப்ரொபேஷன் காலத்தில் பணிபுரியும் ஊழியர்களும் NPS பங்களிப்பைச் செய்வது கட்டாயமாகும்.

7 /10

பங்களிப்பை டெபாசிட் செய்வதில் தாமதம் ஏற்பட்டால், முழுத் தொகையும் வட்டியுடன் சேர்த்து வழங்கப்படும்: மாதாந்திரப் பிடித்தம் ட்ராயிங்க் அண்ட் டிஸ்பர்சிங்க் அதிகாரியால் டெபாசிட் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பிறகு, ஊதியம் மற்றும் கணக்கு அலுவலர் பங்களிப்புகளைத் தொகுத்து, மாத இறுதிக்குள் அறங்காவலர் வங்கிக்கு அனுப்புவார். 

8 /10

மார்ச் மாதத்துக்கான விசேஷ காலக்கெடு நிர்ணயம் செய்யப்படும் என அந்த குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களிப்பை டெபாசிட் செய்வதில் ஊதியம் மற்றும் கணக்கு அதிகாரியின் தரப்பில் ஏதேனும் தவறு ஏற்பட்டால், அந்த ஊழியருக்கு வட்டியுடன் சேர்த்து அவரது பங்களிப்பு வழங்கப்படும்.

9 /10

அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகள் NPS பணிகளை கவனிக்கும் ஊழியர்களுக்கு இந்த விதிமுறைகளை தெரிவிக்குமாறு DoPPW வலியுறுத்தியுள்ளது.

10 /10

பொறுப்பு துறப்பு: இந்த செய்தி உங்கள் தகவலுக்காக அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரப்பூர்வ தளங்களை பார்வையிட பரிந்துரைக்கப்படுகின்றது.