Weight Loss Tips: இன்றைய காலகட்டத்தில் பலருக்கு பரவலாக உள்ள பிரச்சனை உடல் எடை அதிகமாக இருப்பதுதான். அதுவும் தொப்பை வந்து விட்டால் அதை குறைப்பது பிரம்ம பிரயத்னமாக இருக்கின்றது.
Weight Loss Tips: பொதுவாக தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைக்க பலர் பல விதமான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். ஆனால், சில சமயங்களில் தொப்பை பகுதியில் பிடிவாதமாக படிந்துவிடும் கொழுப்பு, எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் குறைவதில்லை. அப்படிப்பட்ட அடாவடி கொழுப்பை குறைகக் உதவும் சில ஆயுர்வேத உதவிக்குறிப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க (Weight Loss) உதவும் பல ஆயுர்வேத பொருட்கள் மற்றும் நுட்பங்கள் உள்ளன. இவற்றின் மூலம் உடல் எடை குறைவதோடு உடல் ஆரோக்கியமும் மேம்படும். பிஸியான வாழ்க்கை முறையிலும் இவற்றை மிக எளிதாக பின்பற்றலாம். அப்படிப்பட்ட அருமையான ஆயுர்வேத குறிப்புகள் பற்றி இந்த பதிவில் காண்லாம்.
எலுமிச்சையில் (Lemon) வைட்டமின் சி மற்றும் அமிலத்தன்மை உள்ளது. இது எடை இழப்பு, வளர்சிதை மாற்றம் மற்றும் செரிமானத்திற்கு மிக நல்லது. சிட்ரிக் அமிலம் கொழுப்பை உடைத்து குறைவாக சாப்பிட உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாற்றை வெதுவெதுப்பான நீர், கல் உப்பு சேர்த்து சர்க்கரை இல்லாமல் குடித்து வந்தால் தொப்பை கொழுப்பு எளிதாக கரையும்.
உடல் எடையை குறைக்க குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்வது மிக அவசியமாகும். இதனால் சில நாட்களில் வயிற்று கொழுப்பு கிட்டத்தட்ட மறைந்து போகும். இப்படி செய்தால் இரண்டு மாதங்களுக்குள் உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
தினமும் சர்க்கரை இல்லாமல் இஞ்சி டீயை குடிப்பது வேகமாக கொழுப்பை குறைக்க உதவும். கொழுப்பை குறைப்பது மட்டுமல்லாமல், இஞ்சி டீ வளர்சிதை மாற்றம், செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
திரிபலா தூள் கடுக்காய், தான்றிக்காய் மற்றும் நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்த்து தயார் செய்யப்படுகின்றது. இந்த பொடியை இரவு உணவு சாப்பிட்ட பிறகு தூங்கும் முன் உட்கொள்ள வேண்டும். தேவையான அளவு பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். இந்த பொடி வளர்சிதை மாற்றத்தை சீராக்கவும், குடல் இயக்கத்தை சீராக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், உடலில் உள்ள நச்சுகளை நீக்கவும் உதவும்.
உடற்பயிற்சிகளுடன் சீரான, ஆரோக்கியமான உணவுமுறையை சேர்த்தால் சில நாட்களில் உடல் எடையை குறைக்கலாம். யோகா ஆசனங்கள் மிகவும் மெதுவான உடற்பயிற்சி போல் தோன்றலாம். ஆனால் இவற்றால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். இவை உடலின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் கொழுப்பை அகற்றும் பணியை செய்கின்றன. கடினமான ஆசனங்களைச் செய்வதற்கு அபரிமிதமான வலிமை, பொறுமை மற்றும் சமநிலை தேவை. அதற்கான பலன்கள் சில நாட்களில் உடல் எடையில் தெரியத் தொடங்கும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.