Uric Acid Control: பல உணவுப் பொருட்களில் பியூரின் உள்ளது. இந்த பொருட்கள் உடலில் உடைந்தால் பியூரின்கள் மூலம் யூரிக் அமிலம் உருவாக்கப்படுகின்றது.
Uric Acid Control: பொதுவாக யூரிக் அமிலம் சிறுநீரகத்திலிருந்து வடிகட்டப்பட்டு அகற்றப்படுகிறது. ஆனால், யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், சிறுநீரகங்களால் அதை வடிகட்ட முடியாமல், யூரிக் அமில படிகங்கள் பரவி, கை, கால், விரல் மூட்டுகளில் படிய ஆரம்பிக்கும். அத்தகைய சூழ்நிலையில், இந்த உயர் யூரிக் அமிலத்தை குறைக்க வேண்டியது அவசியம். அதிக யூரிக் அமிலத்தைக் குறைப்பதில் பயனுள்ள சில வீட்டு வைத்தியங்கள் பற்றி இங்கே காணலாம்.
யூரிக் அமில அளவை பல இயற்கையான வழிகளில் சை செய்யலாம். இவற்றின் மூலம் எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் உடல் எடையை குறைக்க முடியும். இது தவிர இவற்றால் கீல்வாதம், மூட்டு வலி ஆகியவற்றிலும் நிவாரணம் கிடைக்கும்.
எலுமிச்சை நீர்: எலுமிச்சை சாறு உடலில் இருந்து அழுக்குகள் மற்றும் நச்சுகளை அகற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும். குளிர்ந்த எலுமிச்சை நீரை தயார் செய்து குடிக்கலாம் அல்லது வெந்நீரில் எலுமிச்சையை பிழிந்தும் அருந்தலாம். இரண்டிலும் நல்ல பலன்களை காணலாம். தினமும் ஒரு முறை எலுமிச்சை நீர் குடித்து வந்தால், உடலில் இருந்து யூரிக் அமிலம் எளிதாக வெளியேறும்.
மஞ்சள்: மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சள், பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் குர்குமின் காரணமாக, இதை உட்கொள்வதால் யூரிக் அமிலத்தைக் குறைப்பதில் நல்ல பலன் கிடைக்கிறது. காய்கறிகள், சூப்கள், தேநீர் என அனைத்திலும் சிறிது மஞ்சள் சேர்த்து உட்கொள்வது நல்லது.
ஆப்பிள் சைடர் வினிகர்: ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை சேர்த்து தினமும் குடித்து வாருங்கள். ஆப்பிள் சைடர் வினிகர் உடலில் இருந்து அழுக்கு யூரிக் அமிலத்தை அகற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும். அழுக்குகளும் நச்சுகளும் இதன் மூலம் உடலை விட்டு வெளியேறும்.
கிவி: கிவி பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் சி ஆகியவை அதிகமாக உள்ளன. இவை யூரிக் அமில நோயாளிகளுக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்துகள். இந்தப் பழம் யூரிக் அமிலத்தை உடலில் இருந்து வெளியேற்றுவதுடன் மூட்டு வலிக்கும் நிவாரணம் அளிக்கின்றது.
இஞ்சி: அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ள இஞ்சியை உட்கொள்வதால், யூரிக் அமிலத்தை எளிதாக குறைக்க முடியும். மேலும், கீல்வாத பிரச்சனையையும் இஞ்சி குறைக்கிறது. இஞ்சி யூரிக் அமிலத்தால் ஏற்படும் வீக்கத்தையும் குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நார்ச்சத்து: தினசரி உணவில் நார்ச்சத்து நிறைந்த பொருட்களை சேர்த்துக்கொள்வது யூரிக் அமிலத்தை குறைக்க உதவும். பிரவுன் அரிசி, முழு தானிய ரொட்டி, பருப்பு வகைகள், பீன்ஸ், கொண்டைக்கடலை, பாதாம், சியா விதைகள் மற்றும் ஆளி விதைகளை உணவில் சேர்த்துக் கொள்ளவது நல்லது.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.