இந்த உணவுகளை எப்பொழுதும் பிரிட்ஜில் மட்டும் தான் வைக்க வேண்டும்!

பிரிட்ஜில் வைக்க வேண்டிய மற்றும் வைக்க கூடாது சில உணவு பொருட்கள் உள்ளன. இன்று பிரிட்ஜில் கண்டிப்பாக வைக்க வேண்டிய சில உணவு பொருட்களை பற்றி பார்ப்போம்.

 

1 /6

பேரீச்சம்பழம்  உலர்ந்த பழங்கள் வெளியில் வைக்கும் போது நன்றா இருந்தாலும், பேரீச்சம்பழத்தை பிரிட்ஜில் வைக்க வேண்டும். ஏனென்றால் அவை ஈரப்பதத்தை வைத்திருப்பதால் பிரிட்ஜில் வைப்பது நல்லது.  

2 /6

ஜாம் அதிக சர்க்கரை இருப்பதால், ஜாமை வெளியில் வைத்தால் கெட்டு போய்விடும். எனவே கண்டிப்பாக பிரிட்ஜில் வைப்பது நல்லது. இதன் மூலம் அதன் சுவை நீண்ட நாட்கள் இருக்கும்.   

3 /6

ஆப்பிள்கள் பிரிட்ஜில் வைக்க வேண்டிய பழங்களில் ஒன்று ஆப்பிள். ஆப்பிள் எத்திலீன் வாயுவை வெளியிடுகிறது, இது மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளின் பழுக்க வைக்கிறது. குளிர்சாதன பெட்டியில் வைத்தால், எத்திலீன் உற்பத்தி குறைகிறது.  

4 /6

வாழைப்பழங்கள் வாழைப்பழங்கள் பழுத்தவுடன் அவற்றை பிரிட்ஜில் வைக்கலாம். இதன் மூலம் கூடுதலாக 2, 3 நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.   

5 /6

வெண்ணெய் வெண்ணெய்யின் சுவையை பாதுகாக்க பிரிட்ஜில் கண்டிப்பாக வைக்கப்பட வேண்டும். பிரிட்ஜில் வெண்ணெய் வைப்பது ஆபத்தானது இல்லை.   

6 /6

நட்ஸ் நட்ஸ் போன்ற உணவு பொருட்களை பெரும்பாலும் வெளியில் தான் வைத்து இருப்போம். ஆனால் இவற்றை பிரிட்ஜில் வைப்பது சிறந்தது. இவற்றில் அதிக அளவு எண்ணெய் உள்ளன.