Ayurvedic Remedies: வாயில் ஏற்படும் துர்நாற்றத்தையும் கசப்பு சுவையையும் போக்கி, சுவையை மீட்டு, நறுமணம் கமழச் செய்யும் எளிய வழிமுறைகள். இது ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் நறுமணத்தை வரவழைக்கும் குறிப்புகள்
வாயில் சுவை மாற்றமும், கசப்புணர்வும் எதையும் சாப்பிட பிடிக்காத தன்மையை ஏற்படுத்தும். இதற்கு ஆயுர்வேதம் தரும் பக்க விளைவில்லா சுலபமான தீர்வு...
வாயின் சுவை மாறிவிட்டதா? வாயின் கெட்ட ருசியை சரிசெய்ய, உங்கள் சமையலறையில் இருக்கும் மஞ்சள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாயின் சுவையை அதிகரிக்க, சிறிது மஞ்சளில் எலுமிச்சை சாறு கலந்து, பற்களில் தடவவும். மஞ்சள் மற்றும் எலுமிச்சை இந்த பேஸ்ட்டை நாக்கு மற்றும் ஈறுகளில் தடவவும். சிறிது நேரம் கழித்து சுத்தமான தண்ணீரில் கழுவவும். ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்தால் கசப்பு உணவு போய்விடும்
சிறிது பேக்கிங் சோடாவை எடுத்து அதில் 5-6 சொட்டு எலுமிச்சை சாறு சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை கொண்டு பற்களை சுத்தம் செய்யவும். பேக்கிங் சோடா வாயின் pH அளவைக் கட்டுப்படுத்துகிறது, வாயின் சுவையை இயல்பாக்குகிறது பேக்கிங் சோடா
வெந்நீரில் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்கலாம். இதன் மூலமும் வாயின் சுவையை சரிசெய்யலாம். நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை வெந்நீரில் உப்பு சேர்த்து வாயைக் கொப்பளித்தால், உப்பில் உள்ள கிருமி நாசினிகள் வாயில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது.
இலவங்கப்பட்டையை உபயோகிப்பதன் மூலம் வாயில் ஏற்படும் கெட்ட சுவையையும் குணப்படுத்தலாம். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரில் இலவங்கப்பட்டை தூள் சேர்க்கவும். இந்த கரைசலில் சிறிது தேன் சேர்த்து சுவைத்து குடித்தால் வாயின் சுவை இயல்பாகும்.
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து வாய் கொப்பளிக்கலாம். இதன் மூலம் வாயின் கெட்ட சுவை குணமாகும். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி வாயின் pH அளவை மேம்படுத்துகிறது.