Cholesterol Control Tips: கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால் உடலில் பல வித சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதனால் இதயம் தொடர்பான பல பிரச்சனைகளும் வரலாம்.
Cholesterol Control Tips: கொலஸ்ட்ரால் என்பது ஒரு கொழுப்புப் பொருளாகும். இது தமனிகளில் படிந்து அதன் அளவு அதிகரித்தால், தமனிகளில் அடைப்பு ஏற்படலாம். கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சில உணவுகளை இவர்கள் தவிர்ப்பது நல்லது. கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
உயர் கொலஸ்ட்ரால் இந்த காலத்தில் ஒரு பொதுவான பிரச்சனையாகி விட்டது. கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் அதனால் இதய கோளாறுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய சில உணவுகள் பற்றி இங்கே காணலாம்.
சர்க்கரை: உங்கள் உணவில் சர்க்கரையின் அளவை, குறிப்பாக வெள்ளை சர்க்கரை அளவைக் குறைப்பது மிகவும் அவசியம். பதப்படுத்தப்பட்ட சர்க்கரை உடலில் உள்ள இன்சுலின் ஹார்மோனை பாதிக்கிறது. இது இன்சுலின் எதிர்ப்பை உருவாக்கி கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது.
அழற்சி உணவுகள்: பிஸ்கட், சிப்ஸ், ஐஸ்கிரீம், வறுத்த உணவுகள் மற்ற பேக் செய்யப்பட்ட உணவுகள் அழற்சி உணவுகள் அதாவது இன்ஃப்ளாமேடரி உணவுகளாக கருதப்படுகின்றன. இவை உடலின் உட்புற வீக்கத்தை அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கின்றன.
அதிக கொலஸ்ட்ரால் உள்ள நபர்கள் எண்ணெயை மிகக் குறைவாகவே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக சூரியகாந்தி எண்ணெய், சனோலா எண்ணெய், அரிசி தவிடு எண்ணெய் போன்ற சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் அதிக கொழுப்பு உள்ளவர்களுக்கு நல்லதல்ல. இவற்றுக்கு மாறாக தூய நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் நிறைவுற்ற கொழுப்பை தவிர்க்க வேண்டும். பாலாடைக்கட்டி, கொழுப்பு நிறைந்த இறைச்சிகள், பால், பால் கொண்டு செய்யப்பட்ட இனிப்புகள், பாமாயில் போன்ற எண்ணெய்கள் போன்றவற்றில் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் இவற்றை தவிர்ப்பது நல்லது.
அதிகப்படியான மதுபானம், கொலஸ்ட்ரால் அளவையும், ட்ரைகிளிசரைடுகளையும், ஒரு வகை இரத்தக் கொழுப்பையும் அதிகரிக்கும். உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாவதை தவிர்க்க, மது அருந்துவதை தவிர்க்கவும். மதுபானத்தை தவிர்ப்பது உடலில் ஏற்படக்கூடிய பிற பிரச்சனைகளையும் தடுக்கும்.
நமது உடல் நமக்கு தேவையான கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது. தவறான உணவுப் பழக்கத்தால் உடலில் அதிக கொலஸ்ட்ரால் சேர்ந்தால் அது ஆபத்தாகிவிடும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமான உணவுகளின் மூலம் உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.