இந்த கோடை காலத்தில் நமது உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம். சில உணவுகள் உடலில் அதிக வெப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே அதனை தவிர்க்க வேண்டும்.
காரமான உணவுகள் உடல் வெப்பநிலையை உயர்த்தி, உடலுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். அதே போல, வறுத்த உணவுகள் ஜீரணிக்க கடினமாக இருக்கும். இதனால் உடல் அதிக வெப்பத்தை உருவாக்குகிறது.
கோழி அல்லது மீன் போன்றவற்றுடன் ஒப்பிடும்போது மட்டன் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும், இது உடல் வெப்பநிலையை அதிகரிக்கும். மேலும் ஆல்கஹால் எடுத்துக்கொள்வதும் உடல் வெப்பநிலையை அதிகரிக்கும்.
டீ அல்லது காபி அதிகம் குடிப்பது நீரிழப்புக்கு வழிவகுக்கும் மற்றும் உடல் வெப்பநிலையை அதிகப்படுத்தும். வெயில் காலங்களில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
அதிக சோடியம் நிறைந்த உணவுகள் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும், இதனால் உடல் சூடாக மாறலாம். அதே போல அதிக சர்க்கரை கொண்ட உணவுகள் உடலில் வெப்ப உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கும்.
உடலுக்கு நன்மை தந்தாலும் சூடான சூப்கள் உடல் வெப்பநிலையை உயர்த்தும். சூடான சாஸ், கடுகு போன்ற உணவுகள் உடலுக்கு வெப்பத்தை சேர்க்கலாம். எனவே கோடை காலநிலையில் இதனை குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.