இந்த 5 உணவுகளை காலையில் சாப்பிடாதீங்க... பிரபல நடிகையின் கணவர் சொன்ன டிப்ஸ்!

காலையில் நீங்கள் இந்த 5 உணவுகளை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும் என மருத்துவர் ஸ்ரீராம் நேனே தெரிவித்துள்ளார். அதுகுறித்து இங்கு காணலாம். 

மருத்துவர் ஸ்ரீராம் நேனே பிரபல நடிகையும், மக்களவை உறுப்பினருமான மாதுரி தீக்ஷித்தின் கணவர் ஆவார். 

 

1 /8

காலை உணவு என்பது மிக முக்கியமானது. காலையில் சாப்பிடும் உணவே உங்களுக்கு அந்த நாள் முழுவதும் ஆற்றலை அளிக்கக் கூடிய ஒன்றாகும்.   

2 /8

அந்த வகையில், காலை உணவில் இந்த 5 உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என மருத்துவரும், மாதுரி தீக்ஷித்தின் கணவருமான மருத்துவர் ஸ்ரீராம் நேனே அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததை இங்கு விரிவாக காணலாம்.  

3 /8

ஜூஸ்: வெறும் வயிற்றில் ஜூஸ் குடித்தால் உங்கள் ரத்த சர்க்கரை அளவு சட்டென்று எகிறிவிடும். மேலும் பற்களில் பிரச்னை வரும், செரிமானத்திலும் பிரச்னை வரும். பழங்களில்தான் ஃபைபர் அதிகம் உள்ளது, அது சர்க்கரை நோயை குறைக்க உதவும். ஆனால், அதே பழத்தின் ஜூஸில் ஃபைபர் குறைவு. எனவே, ரத்த சர்க்கரை அளவு அதிகமாகும்.   

4 /8

யோகர்ட்: இனிப்பு சேர்க்கப்பட்ட இந்த கெட்டித் தயிரை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள். இதில் புரோபயோட்டீக் மற்றும் கால்சியம் இருந்தாலும் வெறும் வயிற்றில் மட்டும் சாப்பிட வேண்டும். நல்ல பாக்டீரியாக்கள் வயிற்றின் அமிலத்தால் செத்துப் போகலாம். எனவேதான், காலை உணவாக அதனை சாப்பிட வேண்டாம் என்கிறார்.  

5 /8

பால் பிரெட்: வெள்ளை பிரெட்டை காலையில் சாப்பிடுவது ஆரோக்கியமானது இல்லை. காலையில் அந்த வெள்ளை பிரெட்டை சாப்பிட்டால் உடல் பருமன் வரலாம், வயிற்று வலி வரலாம். பிரச்னை அதிகமானால் இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் அபாயமும் அதிகரிககும். அதில் இருக்கும் சர்க்கரையும் உடலுக்கு கேடாகும்.  றுதிப்படுத்தவில்லை. 

6 /8

பதப்படுத்தப்பட்ட இறைச்சி: பதப்படுத்தப்பட்ட இறைச்சியை காலையில் சாப்பிடுவது கெட்ட பழக்கமாகும். இதனால் உயர் ரத்த அழுத்தம் அதிகமாகும், இதய நோய் மற்றும் வயிற்று பிரச்னைகள் வரும்.   

7 /8

சீரல்கள்: இதில் அதிக கிளைசிமிக் இன்டக்ஸ் உள்ளது. அதிலும் அதிக கார்போஹைட்ரேட்ஸ் இருக்கிறது. இதனை காலையில் சாப்பிட்டால், ரத்த அழுத்தம் அதிகமாகும் மற்றும் இதய நோய் ஆபத்தும் அதிகமாகும்.   

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் மருத்துவர் ஸ்ரீராம் நேனே அவரது இன்ஸ்டாகிராம் வீடியோவில் குறிப்பிட்டவை. இவற்றை Zee News உ