அமர்நாத் சக்திபீட பனிலிங்கத்தை தரிசனம் செய்ய ஆசையா? உங்களுக்கு தகுதி இருக்கா? விவரங்கள்...

Amarnath Yatra 2024: இந்த ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரைக்கான பதிவு தொடங்கியது. பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக காத்துக் கொண்டிருந்த சிவபக்தர்களுக்கான காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. இந்த ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி தொடங்கும் அமர்நாத் யாத்திரை, 19 ஆகஸ்ட் 2024 வரை நீடிக்கும்

பக்தர்கள் பலரும் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க ஆசைப்பட்டாலும், இந்த பயணத்திற்கு செல்ல சிலருக்கு அனுமதி இல்லை. அமர்நாத் செல்வதற்கான பதிவு முதல் மருத்துவச் சான்றிதழைப் பெறுவது வரை அனைத்து விவரங்களையும் தெரிந்துக் கொள்ளுங்கள்....  

 

1 /10

51 சக்தி பீடங்களில் ஒன்றான மகாமாயா சக்தி பீடத்தின் உறைவிடமான அமர்நாத் குகையில் உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சிவனின் மனைவியான சதியின் உடல் பாகங்களில் ஒன்று இங்கு விழுந்ததாக ஐதீகம்

2 /10

நீங்கள் பனிலிங்கத்தைத் தரிசிக்க அமர்நாத் யாத்திரை செல்ல திட்டமிட்டிருந்தால், அதற்கு பதிவு செய்வது அவசியமானது. ஆன்லைனிலும், அமர்நாத் ஆலய வாரியம் சொல்லும் வங்கிகளுக்குச் சென்றும் பதிவு செய்யலாம். அமர்நாத் யாத்திரைக்கான பதிவு தொடர்பாக கோவில் வாரியம் தனது இணையதளத்தில் தகவல்களை புதுப்பித்துள்ளது.

3 /10

ஜம்மு காஷ்மீர் அமர்நாத் ஆலய வாரியத்தின் https://jksasb.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய பதிவுக் கட்டணம் ஒரு நபருக்கு ரூ.150 ஆகும்

4 /10

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, யெஸ் வங்கி, ஜம்மு காஷ்மீர் வங்கி உள்ளிட்ட பல அரசு வங்கிகளின் கிளைகளில் ஆஃப்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.  இங்கு பதிவு செய்ய ஒரு நபருக்கு ரூ.250 செலுத்த வேண்டும்.

5 /10

மலைகளுக்கு மத்தியில் மிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் அமர்நாத் யாத்திரையின்போது, சிலருக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும் என்பதால், யாத்திரைக்கு பதிவு செய்வதற்கு முன் மருத்துவச் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  அரசு மருத்துவமனையில் மருத்துவ சான்றிதழைப் பெற்ற பிறகு தான் அமர்நாத் யாத்திரைக்கு பதிவு செய்ய முடியும்.

6 /10

கந்தர்பால் பால்டால் மற்றும் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என இரண்டு வழித்தடங்கள் மூலமாக அமர்நாத் நோக்கி பக்தர்கள் யாத்திரை செல்வார்கள். 

7 /10

இமயமலையில் அமைந்திருக்கும் பனிலிங்கத்தை தரிசிக்க செல்லும்போது மழை, பனி என மாறுபட்ட வானிலைகளால் சில சமயங்களில் யாத்திரை நடுவில் நிறுத்தி வைக்கப்படும்

8 /10

ஜூன் மாத இறுதியில், புனித அமர்நாத் யாத்திரை பக்தி பரவசத்துடன், ஹர ஹர மகாதேவா என்ற முழக்கங்களுடன் தொடங்குவது வழக்கம்

9 /10

அனைத்து அசைவ உணவுகள் உட்பல பல பொருட்களை யாத்ரீகர்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்ட பட்டியல் நீளமானது. 

10 /10

ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் மட்டும் உருவாகும் பனிலிங்கத்தைத் தரிசிக்க பக்தர்கள் ஆவலுடன் செல்கின்றனர்