தனது சிறப்பான புகைப்படம் மூலம் சோஷியல் மீடியாவில் பேசப்படும் நடிகை!!

சமூக ஊடகங்களில் பாலிவுட் நடிகை பிராச்சி தெஹ்லான் (Prachi Tehlan) படங்கள் மிகவும் வைரலாகி உள்ளது. இது முதல் தடவை அல்ல, ஆனால் இந்த முறை அவரது புகைப்படங்கள் விவாதத்திற்கு உள்ளானதற்கு ஒரு சிறப்பு காரணம் உள்ளது...

புதுடெல்லி: பாலிவுட் நட்சத்திரங்கள் சமூக ஊடகங்களில் பகிரும் படங்கள் பெரும்பாலும் வைரலாவது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சில முறை, ஒரு மாடலின் சில படங்கள் அல்லது ஒரு புதிய நடிகையின் படங்கள் திடீரென்று சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அதேபோல இப்போது நடிகையும் மாடலுமான பிராச்சி தெஹ்லானின் (Prachi Tehlan) படங்கள் திடீரென சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. சமூக ஊடகங்களில் பிராச்சி தெஹ்லானின் படங்கள் அதிகம் விரும்பப்படுவது இது முதல் தடவையல்ல என்றாலும், இந்த முறை அவரது படங்கள் விவாததுக்கு உள்ளாகி உள்ளது. பிராச்சி தெஹ்லானின் சில புகைப்படங்கள் வைரலானதுக்கும், அது விவாதத்திற்கு உள்ளானதற்கும் ஒரு சிறப்பு காரணம் உள்ளது...!!

1 /5

டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்த பிராச்சி தெஹ்லானின் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானதுக்கு முக்கிய காரணம், விரைவில் அவர் நடித்த படங்கள் வெளியாக உள்ளது. 

2 /5

பிராச்சி தெஹ்லான் விரைவில் மூன்று வெவ்வேறு மொழிகளில் நடித்த திரைப்படங்கள் வெளியாக உள்ளது. 

3 /5

மம்முட்டி நடிக்கும் "மாமாங்கம்" (Mamangam) திரைப்படத்தில் பாலிவுட் நடிகை பிராச்சி தெஹ்லான் நடிக்கிறார். இந்த படம் 21 நவம்பர் 2019 அன்று வெளியிடப்பட உள்ளது. இது மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் வர உள்ளது.

4 /5

தெலுங்கு படமான "த்ரிஷங்கு" (TRISHANKU) படத்திலும் பிராச்சி தோன்றியுள்ளார்.

5 /5

2017 ஆம் ஆண்டு பஞ்சாபி படத்திலும் பிராச்சி நடித்துள்ளார். அதில் அவரின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்து. புகைப்பட உபயம்: Instagram @Prachitahlan