துபாய்: மே 16 முதல் துபாய் நீங்கலாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ரெசிடென்ஸ் விசா ஸ்டிக்கர்களை எமிரேட்ஸ் அடையாள அட்டைகள் அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளன.
ஒரு நபரின் வதிவிட விவரங்களுடன் கூடிய விசா ஸ்டிக்கர் இனி அவரது பாஸ்போர்ட்டில் இடம்பெறாது. அதற்கு பதிலாக அந்த விவரங்கள் அவரது எமிரேட்ஸ் ஐடியில் சேமிக்கப்படும்.
ஊடக அறிக்கைகளின்படி, அடையாளம் காணுதல், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்பு ஆகியவற்றின் ஃபெடரல் அத்தாரிட்டி, எமிரேட்ஸ் ஐடி வழங்குவதற்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிப்பவர்களுக்கு விசாவைப் புதுப்பிப்பதற்கும் என இரண்டு தனித்தனி விண்ணப்பங்களை ஒன்றிணைப்பதாக அறிவித்துள்ளது.
இந்த மாற்றம் குடியிருப்பு மற்றும் அடையாள அட்டை விண்ணப்பங்களை தனித்தனியாக செயலாக்குவதற்குப் பதிலாக ஒன்றிணைக்கிறது. குடியுரிமை மற்றும் எமிரேட்ஸ் ஐடியை வழங்குதல் அல்லது புதுப்பித்தல் போன்ற கோரிக்கைகளுக்கு இனி ஒரு ஒருங்கிணைந்த படிவம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், துபாயில், இந்த மாற்றம் செயல்படுத்தப்படாது. இந்த இரண்டு விண்ணப்பங்களும் தனித்தனியாக தொடர்ந்து செயலாக்கப்படும்.
ஏன் இந்த மாற்றம்?
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவிற்குப் பிறகு கடந்த மாதம் இந்த மாற்றங்களை குறித்து ஆணையம் அறிவித்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடியிருப்பாளர்களின் வதிவிட நிலையை அவர்களின் பாஸ்போர்ட் எண் மற்றும் எமிரேட்ஸ் ஐடி மூலம் சரிபார்க்கக்கூடிய துறைகள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு அதிகாரத்தால் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
மேலும் படிக்க | மலேஷியா கோவில் கும்பாபிஷேகத்தில் நடந்த சோகம்; பெண் ஒருவர் பலி
கடந்த காலங்களில், புதிய குடியிருப்பு விசாவிற்கு விண்ணப்பிக்கும் அல்லது விசாவைப் புதுப்பிக்கும் எவரும், விசா ஸ்டிக்கரைப் பயன்படுத்த தங்கள் பாஸ்போர்ட்டைச் சமர்ப்பிக்க வேண்டும். இப்போது, புதிய விதியின்படி குடியிருப்பாளர்கள் தங்கள் பாஸ்போர்ட்டில் விசா ஸ்டிக்கர் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மே 16 மற்றும் அதற்குப் பிறகு செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு இது அமலில் இருக்கும். மே 16 ஆம் தேதிக்கு முன் புதிய குடியிருப்பு விசா அல்லது அதை புதுப்பிப்பதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு, அவர்களது பாஸ்போர்ட்டில் விசா ஸ்டிக்கர் ஒட்டப்பட வேண்டும்.
மக்கள் தங்கள் எமிரேட்ஸ் ஐடியின் சாஃப்ட் காப்பியைப் பெற, தங்கள் இணையதளம் அல்லது யுஏஇஐசிபி என்ற ஸ்மார்ட் ஆப்ஸைப் பயன்படுத்தலாம் என்று அதிகாரம் முன்பு கூறியது.
புதிய அடையாள அட்டை
கடந்த ஆண்டு புதிய தலைமுறை எமிரேட்ஸ் ஐடிகள் வெளியிடப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிகாரிகள் புதிய அட்டையை வெளியிட ஏற்கனவே தொடங்கிவிட்டனர்.
வழங்கல் அல்லது புதுப்பித்தல் கோரிக்கையைச் சமர்ப்பித்தவுடன் வாடிக்கையாளர்கள் ஐடியின் சாஃப்ட் காப்பியை பெறலாம். குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படும் புதிய தலைமுறை எமிரேட்ஸ் அடையாள அட்டையில், வசிப்பிட ஸ்டிக்கரில் முன்னர் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் அடங்கும். வதிவிட விசாக்கள் மற்றும் எமிரேட்ஸ் ஐடிகளை வழங்குதல் அல்லது புதுப்பித்தல் ஆகியவை ஒரே விண்ணப்பத்தில் இருக்கும்.
மேலும் படிக்க | ஷார்ஜா வழியாக லேப்டாப்பில் கடத்தப்பட்டு திருச்சி வந்த தங்கம்: சுங்கத்துறை வீடியோ இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR