இலங்கை அதிபருக்கான வாக்கெடுப்பில் இந்தியா அழுத்தம் கொடுத்ததா... இந்திய தூதரகம் கூறுவது என்ன!

இலங்கையின் அதிபரை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பில், இலங்கையின் 8வது அதிபராக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 20, 2022, 05:55 PM IST
  • இலங்கை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட விக்ரமசிங்க, 2024 நவம்பர் மாதம் வரை பதவியில் நீடிப்பார்.
  • அதிபராக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.
  • கடந்த 14ம் தேதி கோட்டாபய ராஜபக்ஷ, பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார்.
இலங்கை அதிபருக்கான வாக்கெடுப்பில் இந்தியா அழுத்தம் கொடுத்ததா... இந்திய தூதரகம் கூறுவது என்ன!  title=

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவித்து வரும் நிலையில், மக்கள் கொந்தளித்து நடத்திய போராட்டத்தினால், அதன் அதிபராக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது, நாட்டில் ஏற்பட்ட தொடர் போராட்டங்கள் காரணமாக சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். சிங்கப்பூரில் இருந்து, கடந்த 14ம் தேதி கோட்டாபய ராஜபக்ஷ, பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார்.

இதை அடுத்து, இலங்கையின் அதிபரை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பில், இலங்கையின் 8வது அதிபராக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கையில், பதவியில் இருந்த அதிபர் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறி, பதவி விலகிய பிறகு, நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக 134 வாக்குகளும், டளஸ் அழகபெருமவிற்கு ஆதரவாக 82 வாக்குகளும், தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்கவிற்கு 3 வாக்குகளும் பதிவாகின.

இந்நிலையில், இலங்கையின் அதிபரை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பில், அரசியல் தலைவர்கள் மீது இந்தியா அழுத்தம் பிரயோகித்ததாக, செய்திகள் வெளியாகியது. இதை அடுத்து இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய தூதரகம்,  நாடாளுமன்ற வாக்கெடுப்பில், அரசியல் தலைவர்கள் மீது இந்தியா அழுத்தம் பிரயோகித்ததாக, வெளியாகியுள்ள செய்திகள் அடிப்படை அற்றதாகும். அந்த செய்திகளை முற்றாக மறுக்கின்றோம் என கூறியுள்ளது. 

மேலும் படிக்க |  இலங்கையில் பெரும் பதற்றம்; ரணில் வீடும் முற்றுகை 

இலங்கை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட விக்ரமசிங்க, 2024 நவம்பர் மாதம் வரை பதவியில்  நீடிப்பார். 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் ஆளும் SLPP கட்சி ஆதிக்கம் செலுத்துகிறது, அக்கட்சிக்கு  கிட்டத்தட்ட 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். 

மேலும் படிக்க | அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள்; தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News