ஓமன் அரசின் முக்கிய முடிவு... NRI தமிழர்களை பாதிக்குமா

ஓமன் அரசு 207 வகை பணிகளில் வெளிநாட்டவர்களுக்கு பதிலாக குடிமக்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 18, 2022, 06:15 PM IST
  • ஓமன் அரசு 207 வகை பணிகளில் வெளிநாட்டவர்களுக்கு பதிலாக குடிமக்களை நியமிக்க முடிவு.
  • வளைகுடா நாடுகளில் அதிக அளவில் தமிழர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
ஓமன் அரசின் முக்கிய முடிவு... NRI தமிழர்களை பாதிக்குமா title=

வளைகுடா நாடுகளில், தமிழர்கள் அதிகம் பணியில் இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், வெளிநாட்டவர்களை பணியில் அமர்த்துவது தொடர்பாக ஓமன் அரசு எடுத்துள்ள முடிவு தமிழர்களை பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒமன் நாட்டை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசின் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஓமன் சுல்தானகத்தில் 200க்கும் மேற்பட்ட தொழில்களில் வெளிநாட்டவர்கள் பணியமர்த்தப்படுவதை அரசு தடை செய்துள்ளது என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

சுல்தானகத்தின் தொழிலாளர் அமைச்சர் இது குறித்து கூறுகையில், இந்த முடிவு அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்படும் என்றும், அது வெளியிடப்பட்ட தேதிக்கு அடுத்த நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் என்றும் கூறினார். 2018 ஆம் ஆண்டில், அமைச்சகம் கிட்டத்தட்ட 10 துறைகளில் பரவியுள்ள 87 தொழில்களில் வெளிநாட்டவர்கள் பணி செய்வதை தடை செய்தது.

அரசு எடுத்துள்ள இந்த முடிவின் வெளிநாட்டவர்கள் 207 தொழில்களில் ஈடுபடுவது தடை செய்யப்படும் என்றும், தற்போதைய பணி அனுமதி காலாவதியாகும் வரை அவர்கள் தொடரலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே வொர்க் பர்மிட் எனப்படும் வேலைக்கான அனுமதி காலாவதியானால், அவர்கள் தாய்நாடு திரும்ப நேரிடலாம்.

மேலும் படிக்க | UAE: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு; உம் அல் குவைனில் புதிய வேக கண்காணிப்பு ரேடார்கள்

புதிய முடிவின் கீழ் நிர்வாக மேலாளர், பணியாளர் விவகார துறை மேலாளர், மனித வளத்துறை மேலாளர், மக்கள் தொடர்பு மேலாளர், பாதுகாப்பு மேற்பார்வையாளர், தொழில் வழிகாட்டல் மேலாளர், ஒருங்கிணைப்பாளர், தெரு வியாபாரிகள், மளிகை வியாபாரி, இனிப்பு விற்பனையாளர், தபால்காரர், வாட்ச்மேன், பண்ணை டிராக்டர் டிரைவர், டெலிவரி முகவர்கள், குளிரூட்டப்பட்ட லாரிகள், ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வண்டிகள், தண்ணீர் லாரிகள், எரிவாயு லாரிகள், குப்பை லாரிகள் மற்றும் அனைத்து வாகனங்களின் ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல பணிகள் இதில் அடங்கும்.

மேலும் படிக்க | அபுதாபி வாழ் தமிழர்களே அலர்ட்: இன்று முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை 

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News