வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஒரு நல்ல செய்தி. உங்கள் குழந்தைகளின் மேல்படிப்புக்கான மிகப்பெரிய செய்தியாக இது இருக்கும். நாட்டில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேர விரும்பும் வெளிநாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) மற்றும் இந்திய வெளிநாட்டுக் குடிமக்கள் (ஓசிஐ) மாணவர்கள், இப்போது இளங்கலை (யுஜி) படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் (சியூஇடி) பங்குகொள்ளலாம். இந்த அறிவிப்பை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இருப்பினும், CUET தேர்வை எழுதிய பிறகும், இவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தில் இடம் கிடைப்பது அந்தந்த கல்வி நிறுவனத்துக்கான சேர்க்கை கொள்கையைப் பொறுத்தது என்று யுஜிசி தெளிவுபடுத்தியுள்ளது.
புதிய விதிகள் இருந்தபோதிலும், வெளிநாட்டுப் பிரஜைகள் கட்டாய சியுஇடி தேவையிலிருந்து தொடர்ந்து விலக்கு அளிக்கப்படுவார்கள், ஏனெனில் 25% சூப்பர்நியூமரரி இடங்களில் சர்வதேச மாணவர்களை அனுமதிக்க பல்கலைக்கழகங்கள் தங்கள் சொந்த நடைமுறையை வடிவமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (IIT) தனது முதல் வெளிநாட்டு வளாகத்தை அடுத்த ஆண்டு அபுதாபியில் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதர் சுஞ்சய் சுதிர் உறுதிப்படுத்தினார். இது குறித்து தெரிவித்த சுதிர், ஐஐடி-கள் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற உயர்நிலை கல்வி நிறுவனங்கள் என்றும், அந்த புகழ்பெற்ற கல்வி நிறுவனம் அபு தாபியில் வருவது ஒரு பெரிய, குறிப்பிடத்தக்க நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க | அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் களம் இறங்கும் விவேக் ராமசாமி! யார் இவர்!
"வெளிநாட்டு மாணவர்கள், NRI, OCI மாணவர்கள் ஆகியோரும் CUET (UG) 2023 க்கு விண்ணப்பிக்கலாம். மேலும் அவர்கள் இந்தியாவிற்கு வெளியே உள்ள எந்த நகரங்களிலும் [தேர்வு மையங்களாக நியமிக்கப்பட்ட நகரங்கள்] தேர்வுக்கு அமரலாம். இருப்பினும், அனைத்து வெளிநாட்டு, NRI மற்றும் OCI மாணவர்களும் இது குறித்த புதுப்பித்தல்களுக்கு இணையதளத்தைப் பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள். சேர்க்கை கோரப்படும் பல்கலைக் கழகம் மற்றும் இது சம்பந்தமாக அவற்றின் தொடர்புடைய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, அதற்கேற்ப வழிகாட்டப்பட வேண்டும்" என்று யுஜிசி தலைவர் எம். ஜெகதேஷ் குமார் கூறினார்.
மேலும் படிக்க | UPI Money Transaction: யுபிஐ பணப்பரிமாற்றத்திற்கு என்ஆர்ஐகளை ஊக்குவிக்கும் இந்தியா
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ