வாஷிங்டன்:அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் 52 வயது இந்திய அமெரிக்கர் ஒருவர் தனது வீட்டுவாசலில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்டியுள்ளது. குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமையன்று சுட்டுக் கொல்லப்பட்ட பினால் பட்டேல் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததார். பினால் பட்டேல் சுடப்பட்டபோது, அவருடன் இருர்ந்ஹ்ட அவரது மனைவி மற்றும் மகளின் உடல் நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.
கொலையாளிகள் பயன்படுத்திய தப்பிச் செல்லும் கார் மற்றும் மூன்று முகமூடி அணிந்தவர்கள் மற்றும் ஒரு ஓட்டுநரின் படத்தை அமெரிக்க காவல்துறை வெளியிட்டுள்ளது. ஒரு குடும்பத்தையே குறிவைத்துத் தாக்கிய குற்றவாளிகள் ஏன் இந்த குற்றத்தை செய்தனர் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.
குற்றவாளிகள், பினால் பட்டேல் குடும்பத்தினரிடம் இருந்து எதையும் எடுத்துச் செல்லவில்லை என்பதால், தாக்குதலுக்கான நோக்கம் பணம் தொடர்பானது இல்லை என ஊகிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | ஒரே ஆண்டில் துப்பாக்கிச்சூட்டில் 44,000 பேர் பலி! என்ன நடக்கிறது அமெரிக்காவில்?
கடந்த வாரம் சிகாகோவில் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில் இந்திய அமெரிக்கர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இரண்டு கொலைகளுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்றாலும் இந்திய அமெரிக்கர்கள் குறிவைக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்பது மட்டுமே, இந்த இரு இந்தியர்களின் கொலைகளில் உள்ள ஒரே தொடர்பாக இருக்கிறது.
அண்மை துப்பாக்கிச் சூடு பற்றிய கேள்விக்கு பதிலளித்த பிப் கவுண்டியின் அதிகாரிகள், படேல், அவரது மனைவி மற்றும் அவர்களது குழந்தை என மூவரும் காயமடைந்த நிலையில் கண்டறியப்பட்டதாக தெரிவித்தனர்.
மேலும் படிக்க | அமெரிக்க நிறுவனங்களில் ஆயிரக்கணக்கில் பணி நீக்கங்கள்! ஜோ பைடன் கவலை!
படேலும் அவரது குடும்பத்தினரும் வேலை முடிந்து வீடு திரும்பியபோது, "முகமூடி அணிந்த மூன்று நபர்கள் துப்பாக்கியுடன் எதிர்கொண்டனர். படேல் மூவரையும் எதிர்கொண்டார், அவ்வாறு செய்யும்போது, குடும்பத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பின்னர் முகமூடி அணிந்த மூன்று நபர்களும் ஓடிவிட்டனர். நான்காவது நபர், தெருவின் குறுக்கே நின்றிருந்த வாகனத்தில் காத்திருந்தார். துப்பாக்கியால் சுட்ட பிறக்கு, அந்த நபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர். குடும்பத்தினரிடம் இருந்து எந்தப் பொருட்களும் எடுக்கவில்லை".
(மேலே உள்ள கட்டுரை ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டது. கட்டுரையில் எடிட்டோரியல் மாற்றங்களை Zeenews.com செய்யவில்லை. கட்டுரையின் உள்ளடக்கங்களுக்கு செய்தி நிறுவனமான IANS மட்டுமே பொறுப்பாகும்)
மேலும் படிக்க | US விசா பெற 2 ஆண்டுகள் காத்திருக்க முடியாதா... TCN மூலம் விசா பெறலாம்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ