சிங்கப்பூர்: சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் (MOH) திங்கள்கிழமை (ஜூலை 25) மேலும் ஒரு குரங்கு அம்மை நோயாளி பற்றிய செய்தியை உறுதிபடுத்தியது. இந்த நோயாளியுடன் சிங்கப்பூரில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து உலக நாடுகள் சற்று மீண்டு வரும் நிலையில், தற்போது குரங்கு அம்மை என்ற இந்த புதிய தொற்று பீதியை கிளப்பி வருகிறது. குரங்கு அம்மை என்பது ஒரு தொற்று நோயாகும். இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும் பின்னர் மனிதரிடமிருந்து மனிதனுக்கும் பரவுகிறது. மங்கி பாக்ஸின் வைரஸ் தொற்று பெரியம்மை போன்றது.
தற்போது மங்கி பாக்ஸ் கண்டறியப்பட்ட நபர் 31 வயதான பிலிப்பைன்ஸ் மனிதர் என்று MOH தனது இணையதளத்தில் ஒரு புதுப்பிப்பில் தெரிவித்துள்ளது.
ஜூலை 21 அன்று அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்களுக்குப் பிறகு, திங்களன்று அவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டது. அவர் முகம் மற்றும் அவரது உடலின் பிற பகுதிகளில் தடிப்புகள் இருந்ததாக MOH தெரிவித்துள்ளது.
அந்த நபர் ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் (SGH) மருத்துவ உதவியை நாடினார். அதே நாளில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அமைச்சகம் மேலும் கூறியது.
அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தேடும் பணிகள் நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நபரின் நோய்த்தொற்று முந்தைய குரங்கு அம்மை நோயாளிகளுடன் தொடர்புடையது அல்ல என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குரங்கு அம்மை என்பது ஒரு வைரஸ் நோயாகும். இது பொதுவாக தன்னைத்தானே கட்டுப்படுத்துகிறது. இதனால் பாதிக்கப்படும் நோயாளிகள் 14 முதல் 21 நாட்களுக்குள் குணமடைவார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவாக காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி, வீக்கம் நிணநீர், உடல் குளிர்ச்சி, சோம்பல் மற்றும் சொறி போன்றவை ஏற்படும்.
சிங்கப்பூரில் ஜூன் மாதம் முதல் இதுவரை ஒன்பது பேருக்கு மங்கி பாக்ஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நான்கு பேர் வெளி நாடுகளுக்கு சென்று வந்தவர்கள். ஐந்து பேர் உள்ளூரில் இருந்தவர்கள். இவர்கள் யாரும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொளண்டவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
திங்களன்று, சுகாதார அமைச்சர் ஓங் யே குங், குரங்கு அம்மைக்கு எதிராக சிங்கப்பூர் மக்களுக்கு பெருமளவில் தடுப்பூசி போடுவதை சுகாதார அமைச்சகம் பரிந்துரைக்கவில்லை என்று கூறி வைரஸ் நோய் குறித்த அமைச்சகத்தின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். உலக சுகாதார அமைப்பு (WHO) சனிக்கிழமையன்று குரங்கு காய்ச்சலை சர்வதேச கவலைகளை அதிகரித்துள்ள பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது.
மேலும் படிக்க | குரங்கு அம்மை: அறிகுறிகள் என்ன? சிகிச்சை உள்ளதா? எப்படி பாதுகாப்பாக இருப்பது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ