UPI-PayNow: UPI உலகளவில் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் UPI என்னும் பண பரிவர்த்தனை அமைப்பு, பணம் செலுத்துவதற்கான மிக எளிய டிஜிட்டல் முறையாக உள்ள நிலையில், இதனை மற்ற நாடுகளும் அறிமுகப்படுத்தி வருகின்றன. மிகவும் விரைவாக பணம் செலுத்துவதற்கான எளிதான வழி காரணமாக மக்கள் இதை விரும்புகிறார்கள். இன்று இந்திய UPI மற்றும் சிங்கப்பூரின் PayNow இடையே எல்லைக் கடந்த இணைப்பு சேவை தொடங்கப்பட்டது. இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை தாண்டிய இணைப்பின் கீழ் மிக எளிதாகவும் விரைவாகவும் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும். சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்கள் இந்தச் சேவையால் அதிகப் பயனடைவார்கள். சிங்கப்பூரில் படிக்கும் அனைத்து இந்திய மாணவர்களின் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு UPI மூலம் டிஜிட்டல் பணம் செலுத்துவதன் மூலம் மிக எளிதாக பணம் அனுப்ப முடியும். ரியல்-டைம் பேமென்ட் சிஸ்டம்ஸ் இணைப்பு காரணமாக இவை அனைத்தும் சாத்தியமாகும். அதன் பலன்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | Golden Visa: முதலீட்டை ஈர்த்த கோல்டன் விசாவுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐரோப்பிய நாடு!
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கிடைக்கும் வசதி
இந்தியாவின் UPI மற்றும் சிங்கப்பூரின் PayNow ஆகியவற்றின் ஒருங்கிணைப்பால் இரு நாடுகளிலும் வாழும் மக்கள் பெரிதும் பயனடையப் போகிறார்கள். இரு நாடுகளிலும் வசிக்கும் மக்கள் மிக எளிதாகவும் வேகமாகவும் மலிவான கட்டணத்தில் பணத்தை அனுப்ப முடியும். இதுவரை வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) UPI சேவை மூலம் பணம் செலுத்த முடியாமல் இருந்தது. ஏனெனில், இந்தச் சேவை இந்திய சிம் கார்டுகளைக் கொண்ட போன்களில் மட்டுமே கிடைத்தது. ஆனால், இப்போது வெளிநாடு வாழ் இந்தியர்கள் NRI அல்லது NRO கணக்கை சர்வதேச சிம்முடன் இணைப்பதன் மூலம் UPI மூலம் எளிதாக பணம் செலுத்த முடியும். பொது மக்களின் வேறு சில நன்மைகளைப் பற்றி நாம் பேசினால், UPI மற்றும் PayNow மூலம் இந்திய மாணவர்கள் மிகவும் பயனடைவார்கள். அதுமட்டுமின்றி, குழந்தைகளின் பெற்றோரும் அவர்களுக்கு பணம் அனுப்புவது எளிதாகும்.
சிங்கப்பூருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர்
UPI-PayNow இணைப்பு நிகழ்ச்சியில் சிங்கப்பூருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான நட்புறவு மிகவும் பாரம்பரியமானது என்றார். காலம் கடந்த உறவை பரமாரித்து வந்த இரு நாட்டு மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த 'UPI PAYNOW' இணைப்பு இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக இந்தியா மற்றும் சிங்கப்பூர் மக்களை நான் வாழ்த்துகிறேன். இந்த இணைப்பு இரு நாட்டு மக்களுக்கும் குறைந்த கட்டணத்தில் நிகழ்நேர கட்டண அனுப்பும் வசதியை வழங்கி பணம் அனுப்பும் முறையை எளிதாக்கும். இதன் மூலம் மாணவர்கள், தொழில் வல்லுநர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அதிகம் பயனடைவார்கள் என்றார்.
மேலும் படிக்க | 10 நாடுகளில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு UPI சேவை!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ