டிடிவி-யுடன் இனி இணைந்து செயல்பட போவதில்லை -திவாகரன்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரனுடன் இனி இணைந்து செயல்பட போவதில்லை என சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்!

Last Updated : Apr 25, 2018, 08:54 AM IST
டிடிவி-யுடன் இனி இணைந்து செயல்பட போவதில்லை -திவாகரன்! title=

அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரனுடன் இனி இணைந்து செயல்பட போவதில்லை என சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்!

டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் மூலமாக திவாகரன், தினகரன் இடையே இருக்கும் முறன்பாடுகள் வெளியே வந்தது. இதனையடுத்து வெற்றிவேலுக்கு திவாகரனின் மகன் ஜெயானந்த் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இதனையடுத்து வெற்றிவேலும், ஜெயானந்தும் மாறி மாறி சசிகலாவின் தியாகத்திற்காகத் தான் அமைதியாக இருக்கிறோம் என காட்டம் காட்டினார்கள். 

இந்நிலையில் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த திவாகரன் அவர்கள் தெரிவிக்கையில்... 

"அம்மா அணி என்ற பெயரில் தனித்து செயல்படுவோம் தேவைப்பட்டால் தேர்தலை சந்திப்போம். டிடிவி தினகரனுடன் இனி இணைந்து செயல்பட போவதில்லை" என தெரிவித்தார்

மேலும் அவர் தெரிவிக்கையில் "தினகரன் தன் குடும்ப உறுப்பினர்களுக்காகவே கட்சியை தொடங்கியுள்ளார். அண்ணாவும் திராவிடமும் இல்லாத கட்சியை நாங்கள் எப்போதும் ஏற்கமாட்டோம். 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான். அம்மா அணி என்ற பெயரில் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்." எனவும் தெரிவித்துள்ளார்!

Trending News