அமுதாவும் அன்னலட்சுமியும்: வடிவேலு செய்யும் சூழ்ச்சி.. செந்திலுக்கு சிதம்பரம் கொடுத்த இன்ப அதிர்ச்சி

வடிவேலு செய்யும் சூழ்ச்சி, செந்திலுக்கு சிதம்பரம் கொடுத்த இன்ப அதிர்ச்சி என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 29, 2023, 11:07 AM IST
  • அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது?
  • அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
  • இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
அமுதாவும் அன்னலட்சுமியும்: வடிவேலு செய்யும் சூழ்ச்சி.. செந்திலுக்கு சிதம்பரம் கொடுத்த இன்ப அதிர்ச்சி title=

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அமுதா அப்பாவை அழைக்க அவர் வர சம்மதிக்கிறார். அதோடு இளங்கோவிடம் காப்பு தருகிறார். 

மேலும் படிக்க | பரணி முன்னால் அசிங்கப்பட்ட ஷண்முகம், நடந்தது என்ன? அண்ணா இன்றைய எபிசோட் அப்டேட்

இதனை தொடர்ந்து வடிவேலு ஆசாரியிடம் அமுதா வாங்கிய அதே காப்பு வேண்டும் என சொல்லி வாங்கி விட்டு இந்த விஷயத்தை யார் கிட்டயும் சொல்லக் கூடாது என சொல்கிறான். அதன் வடிவேலு பிறகு வடிவேலு அன்னலட்சுமியிடம் தன் மனைவிக்கு தான் காப்பு வாங்கி இருப்பதாக சொல்லி அதை நீ தான் சபைல வச்சு போடனும் என கொடுக்கிறான். 

மேலும் உன் பேரக் குழந்தைக்கு நீ போட்ட காப்பு சத்தம் கேக்கனும் என சொல்ல, அன்னம் நெகிழ்ச்சி அடைகிறாள். பிறகு பங்ஷனுக்கு அனைவரும் வர வடிவேலு சிதம்பரத்தை அவமானப்படுத்த அவர் பொறுமையாக இருக்கிறார். அமுதாவும் செந்திலும் பங்ஷனுக்கு வர ஊர்மக்கள் எழுந்து அவளுக்கு வணக்கம் சொல்ல, அவளுக்கு கிடைக்கும் மரியாதையை சிதம்பரம் பார்த்து ரசிக்கிறார். 

சிதம்பரம் சாப்பிடுக் கொண்டிருக்க, அங்கு வரும் செந்தில் அவரைப் பார்த்து விட்டு தயக்கதுடன் அங்கிருந்து நகர, சிதம்பரம் அவனைப் பார்த்து வாங்க மாப்பிள்ளை உட்காருங்க என சொல்ல, செந்தில், அமுதா சந்தோஷப்படுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது

அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.

மேலும் படிக்க | மேலும் படிக்க | Adah Sharma: ‘நல்லா சர்கஸ் பண்ற மேன் நீ..’ புடவையில் Back Flip செய்த கேரளா ஸ்டோரி பட நாயகி..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News