ஷண்முகம் எடுத்த அதிரடி முடிவால் முத்துபாண்டிக்கு புல்ஸ்டாப்? அண்ணா சீரியல் அப்டேட்!

Anna Serial Update Today: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. 

Written by - Yuvashree | Last Updated : Oct 30, 2023, 02:08 PM IST
  • ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தொடர், அண்ணா.
  • இதில் அண்னனுக்கும் தங்கைகளுக்கும் இருக்கும் பாசப்போராட்டம் கதையாக உள்ளது.
  • அண்ணா சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் என்ன?
ஷண்முகம் எடுத்த அதிரடி முடிவால் முத்துபாண்டிக்கு புல்ஸ்டாப்? அண்ணா சீரியல் அப்டேட்! title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் முத்துபாண்டியை கொல்ல முடிவெடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, வைகுண்டம் சண்முகத்தை கைபிடித்து அவன் அம்மாவாக நினைக்கும் மரத்தின் அருகே கூட்டு வந்து நீ அவனை வெட்டிட்டா எல்லா பிரச்னையும் சரியாகிடாது, அந்த வெங்கடேஷுக்கும் ரத்னாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும் அது தான் இதுக்கு தீர்வு என்று சொல்கிறார். 

அதன் பிறகு ஷண்முகம் ஜோசியரை வந்து சந்திக்க அவர் அம்மன் கோவிலுக்கு வேஷம் கட்டி ஆடி எவ்வளவு நாள் ஆச்சு என்று கேட்க இவன் நாலு வருஷம் ஆச்சு என்று சொல்ல இந்த வருஷம் நீ வேஷம் கட்டி ஆடு, எல்லா பிரச்னையும் தீர்ந்து உன் தங்கைகளுக்கு வரிசையா கல்யாணம் நடக்கும் என்று சொல்ல ஷண்முகம் வேஷம் கட்ட முடிவெடுக்கிறான். 

மேலும் படிக்க | பிக்பாஸ் 7: எவிக்ட் ஆன யுகேந்திரன்-வினுஷாவிற்கு கிடைத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அதனை தொடர்ந்து மார்க்கெட்டில் பாக்கியத்தை சந்தித்து விஷயத்தை சொல்ல அவளும் நல்ல விஷயம் தான், முதலில் ரத்னாவுக்கு கல்யாணத்தை முடித்திடலாம் என்று சொல்ல இதை ஒட்டு கேட்கும் சனியன் வீட்டிற்கு வந்து முத்துப்பாண்டி மற்றும் சௌந்தரபாண்டியிடம் சொல்கிறான். சௌந்தரபாண்டி இதே திருவிழாவில் வச்சி நீ அந்த ரத்னா கழுத்தில் தாலியை கட்டிட்டு என்று சொல்ல முத்துபாண்டியும் அதற்கு தயாராகிறான். 

மறுபக்கம் வீட்டிற்கு வந்த ஷண்முகம் வேஷம் கட்டி ஆட போவதை சொல்ல அதை கேட்டு எல்லாரும் சந்தோஷமடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | “இனி படம் இயக்குவதாக இல்லை..” பிரபல இயக்குநரின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News