ராஜா ராணி சீரியலில் ஆலியா மானசாவுக்கு பதில் இவரா? ரியல் ஜோடி கைகொடுக்குமா?

ராஜா ராணி சீரியலின் முதல் பாகத்தில் சஞ்சீவ் - ஆல்யா ரீல் ஜோடியாக வந்து ரியல் ஜோடி ஆனார்கள். தற்போது ரியல் ஜோடியே கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Written by - Bhuvaneshwari P S | Edited by - அதிரா ஆனந்த் | Last Updated : Mar 8, 2022, 04:27 PM IST
  • ஆல்யா மானசாவுக்கு பதில் யார்?
  • ராஜா ராணியில் கை கோர்க்கும் நிஜ ஜோடி
  • ஏன் விலகுகிறார் ஆல்யா மானசா?
ராஜா ராணி சீரியலில் ஆலியா மானசாவுக்கு பதில் இவரா? ரியல் ஜோடி கைகொடுக்குமா? title=

தமிழ் தொலைக்காட்சியின் முக்கியமான ஒரு சீரியல் ராஜா ராணி 2. இதன் முதல் பாகம் வெளியாகி ஹிட் அடித்தது. அதில் நடித்த சஞ்சீவ் - ஆல்யா மான்சா ஜோடி நிஜத்திலும் கைகோர்த்தனர். இந்த தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது. சஞ்சீவ் தற்போது சன் டிவியில் கயல் சீரியலில் நடித்து வருகிறார்.

Alya manasa

ராஜா ராணி சீரியல் வெற்றியை அடுத்து அதன் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிடப்பட்டது. அதில் நாயகியாக ஆல்யா மானசாவே நடிக்க ஒப்பந்தமானார். அவருக்கு ஜோடியாக நடிக்க திருமணம் சீரியல் புகழ் சித்து ஒப்பந்தமானார். இந்த சீரியல் தொடங்கிய அடுத்த சில மாதங்களில் ஆல்யா மீண்டும் கர்ப்பமானார். ஒரு பெண் திருமணத்துக்குப் பிறகு தனது ஐபிஎஸ் கனவை நோக்கி பயணிக்கும் கதைக்களத்தில் தைரியமான நாயகியாக ஆல்யா நடித்து வருகிறார். ஆனால் அவர் கர்ப்பமானதால், கதைக்கு ஏற்றார் போல அவரால் நடிக்க முடியவில்லை. அவருக்காக கதை மாற்றப்பட்டது. தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஆல்யா குழந்தை பேறுக்கு பிறகு சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் மாற்றப்படமாட்டார் என சீரியல் தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க | பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய மற்றொரு பிரபலம்!

இந்நிலையில் தற்போது ஆல்யா மானசாவுக்கு பதில் நாயகன் சித்துவின் மனைவியும், சீரியல் நடிகையுமான ஸ்ரேயா ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. முதல் பாகத்தில் சஞ்சீவ் - ஆல்யா ரீல் ஜோடியாக வந்து ரியல் ஜோடி ஆனார்கள். தற்போது ரியல் ஜோடியே கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆல்யா மானசாவுக்கு பதில் வேறு யாரும் நடிப்பார்களா? அல்லது அவரே குழந்தை பெற்ற பிறகு ஒரு சில வாரங்கள் பிரேக் எடுத்து நடிக்க வருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | Viral video: மாஸ் பைக் ஓட்டும் ஆல்யா மானஸா: வைரலாகும் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News