சென்னை வேப்பேரி பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பொதுச் செயலாளர் தமீமும் அன்சாரி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,"மத மோதலை உருவாக்க நினைக்கும் சினிமா படங்களுக்கு தடை விதித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆணையரிடம் புகார் அளித்தோம்.
சமீப கால அமைதி பூங்கா தமிழ்நாட்டில், மதரீதியான பிரச்சினைகளை உருவாக்க திரைப்படங்களை எடுத்து திரையிட்டு வருகின்றன. இதற்கு பெரும் தொகைகளை செலவுகள் செய்தும் வருகின்றன. மனிதநேயமற்ற இஸ்லாமிய மத விருப்பு சிந்தனையாக எடுத்த திரைப்பட இயக்குனர்களும், நடிகர்களும் இருப்பது பெரும் வேதனை அளித்துள்ளது.
இதை ஆளும் அரசு இரும்பு கரம் கொண்டு இத்திரைப்படத்தை தடுக்க வேண்டும். மத நல்லிணக்கத்தை வெறுக்கும் விதமாக இருப்பவர்களின் மீது காவல்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சமீபத்தில் ஓடிடி மூலம் வெளியிடபட்ட 'புர்கா' என்கிற திரைப்படம் இஸ்லாமிய கோட்பாடுகளை கடுமையாக தாக்கி எடுக்கப்பட்டதாகவும், முஸ்லிம்கள் பெரிதும் மதிக்கக்கூடிய திருக்குர்ஆன் வசனங்களை திரையிட்டு உண்மைக்கு மாற்றமான கருத்துக்களை இஸ்லாம் சொல்வது போல 'புர்கா' என்கிற படத்தில் காட்டி இஸ்லாமியர்கள் உள்ளங்களில் மனவலியை ஈட்டியை பாய்ச்சுகின்றார்கள்.
மேலும் படிக்க | நான் வாய் திறந்தா சமந்தா மானம் போய்டும்.. விளாசும் தயாரிப்பாளர்! என்ன நடந்தது?
காட்டுமிராண்டியாய் மனிதன் வாழ்ந்த காலத்தில் பெண்களுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்கி, மறுமணம் என்ற சட்டத்தை கற்று தந்தது இஸ்லாம். கணவனை இழந்து முஸ்லிம் பெண்கள் மறுமணம் செய்வதற்கு விதிக்கப்பட்ட (இத்தாஹ்) என்ற சட்டம் குறித்து கொஞ்சம் கூட அறியாமல் மிகவும் மோசமாக திரைப்படமாக வெளியிட்டு இருப்பதை மத மோதலை ஏற்படுத்த நினைப்பவர்கள் தான்.
தற்போது, பர்ஹானா என்ற புதிய திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இப்படத்தில், விபச்சாரத்தை ஊக்குவித்து இஸ்லாமிய பெண்களை மட்டும் காட்டி கேவலமான முறையில் இந்த படங்களில் வசனம் அமைக்கப்பட்டுள்ளது. கண்ணியமாக முஸ்லிம்கள் பெண்கள் அணியும் ஹிஜாப் என்ற ஆடையை தொடர்ந்து பலரும் கொச்சைப்படுத்தி வருகின்றனர்.
பர்ஹானா படத்தின் டீசர்
தற்போது ஹிஜாப் அணிந்த பெண் கர்நாடக மாநிலத்தில் கல்வி மதிப்பெண் முதலிடம் பெற்றுள்ளார். மேலும் கேரளாவில் 18 தங்கப் பதக்கங்களை வென்றவர், ஹிஜாப் அணிந்த கல்லூரி மாணவி. இதனால், இஸ்லாமிய பெண்கள் பெருமை படுகின்றனர்.
மூளையில் ஹிஜாப் அணியவில்லை, தலையில்தான் ஹிஜாப் அணியப்படுகிறது. புர்கா திரைப்பட இயக்குனர் சர்ஜீன், நடிகர்கள் கலையரசன், மெர்னா ஆகியோரை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பர்ஹானா திரைப்பட இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், நடிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ், மற்றும் செல்வராகவன் ஆகியோரையும் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்லாமிய மதத்தின் வரலாற்றை தவறான முறையில் பர்ஹானா திரைப்படத்தை திரையிடாமல் காவல்துறையினர் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்" என்றார்.
மேலும் படிக்க | நேபாளத்தில் செஃப் ஆக அஜித்... ரசிகரின் வீடியோ வைரல் - அப்போ AK62 என்னாச்சு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ