‘வேலைக்காரன்’ படத்தின் 2 ப்ரோமோ வீடியோக்கள்!

வேலைக்காரன் படத்தை பார்த்த சென்சார் குழுவினரும் கிளீன் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனராம். 

Last Updated : Dec 19, 2017, 12:50 PM IST
‘வேலைக்காரன்’ படத்தின் 2 ப்ரோமோ வீடியோக்கள்! title=

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் படம், 'வேலைக்காரன்'. 

ரெமோ படத்தைத் தயாரித்த '24 AM STUDIOS' இந்த படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து, வரும் டிசம்பர் 22-ம் தேதி படம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில், வெளியிடப்பட்ட இதன் டீஸர், மோஷன் போஸ்டர், பாடல்கள் மற்றும் செட் மேக்கிங் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படத்தை பார்த்த சென்சார் குழுவினரும் கிளீன் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனராம். 

இந்நிலையில் தற்போது, படத்தின் 2 புதிய ப்ரோமோ வீடியோக்களை ’24 AM’ நிறுவனம் தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
 

Trending News