மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் திரைப்படங்கள் சட்ட விரோதமாக இணையத்தில் வெளியாவதை தடுக்க முடியும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடுவிடம் நடிகர் விஷால் கோரிக்கை மனு அளித்தார். அவருடன் நடிகர் கமல் இருந்தார்.
சென்னை வந்துள்ள மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்புத் துறை அமைச்சர் வெங்கைய நாயுடுவை நடிகர்கள் கமல்ஹாசன், விஷால் உள்ளிட்டவர்கள் நேரில் சந்தித்து பேசினர். வெங்கையாடு நாயுடுவிடம் சட்ட விரோதமாக படங்கள் இணையத்தில் வெளியாவதை தடுக்கக் கோரிக்கை மனுவும் அளித்தனர்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஷால்:-
திரைப்படங்கள் சட்டவிரோதமாக வெளியாவது தமிழ்நாட்டிற்கு மட்டும் உரிய பிரச்னை அல்ல. அது அனைத்து மாநிலங்களுக்குமான பிரச்னை. தமிழ் திரைப்படத்துறை வளர்ச்சி குறித்து சில கோரிக்கைகளை வைத்தோம். திரைப்படங்கள் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்தோம். இவ்வாறு கூறினார்.