மிரட்டும் விஜய் சேதுபதியின் "சிந்துபாத்" டீசர்

இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணையும் 'சிந்துபாத்' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Last Updated : Mar 12, 2019, 10:21 AM IST
மிரட்டும் விஜய் சேதுபதியின் "சிந்துபாத்" டீசர் title=

இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணையும் 'சிந்துபாத்' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' ஆகிய படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதி - அருண்குமார் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளனர். காதல் கலந்த ஆக்சனுடன் உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்துள்ளார். வாசன் மூவீஸ் மற்றும் கே புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். 

இந்நிலையில் தற்போது சிந்துபாத் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் `சிந்துபாத்’ விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News