பாலிவுட் ஹீரோக்களை ஓரம்கட்டிய நடிகர் விஜய்! இனி இவர் தான் நம்பர் 1?

தமிழ் சினிமாக்களும், நடிகர்களும் அதிக பெருமைகளை பெற்று வரும் நிலையில், தற்போது தளபதி விஜய் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்கிற பெருமையினை பெற்றிருக்கிறார்.  

Written by - RK Spark | Last Updated : Jun 4, 2023, 08:37 PM IST
  • விஜய்யின் 'தளபதி 68' படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.
  • 'தளபதி 68' படத்துக்காக விஜய்க்கு ரூ.200 கோடி சம்பளம் வழங்கப்படவிருக்கிறது.
  • 'தளபதி 68' படத்தை ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
பாலிவுட் ஹீரோக்களை ஓரம்கட்டிய நடிகர் விஜய்! இனி இவர் தான் நம்பர் 1? title=

இந்திய திரையுலகிலேயே பாலிவுட் மிகவும் விலையுயர்ந்த திரைப்படத் துறையாகக் கருதப்படுகிறது.  ஏனெனில் பாலிவுட் திரைப்படங்கள் பலவும் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாக்கப்படுகிறது மற்றும் இதிலுள்ள நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் அதிகளவிலான தொகையில் சம்பளம் வழங்கப்படுகிறது.  பாலிவுட் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களாக இருந்துவரும் அமிதாப் பச்சன், சல்மான் கான், ஷாருக்கான், அக்‌ஷய் குமார் முதல் அமீர் கான் போன்ற நட்சத்திரங்களின் சம்பளம் அவர்கள் நடிக்கும் படத்தின் பட்ஜெட்டை விட அதிகமாக இருக்கும்.  பாலிவுட் நடிகர்கள் தங்களது ஒரு படத்திற்கே சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் சம்பாதிக்கின்றனர்.  அமிதாப் பச்சன், சல்மான் கான், ஷாருக்கான், அக்‌ஷய் குமார், பிரபாஸ் போன்ற பல பாலிவுட் நடிகர்கள் தான் அதிகளவில் சம்பளம் வாங்கி வருகின்றனர் என்று நினைத்து கொண்டிருந்த நிலையில் இந்த நடிகர்களையெல்ல்லாம் ஓரம்கட்டிவிட்டு ஒரு தமிழ் நடிகர் அதிக சம்பளம் வாங்கி நம்பர் ஒன்-ஆக மாறியுள்ளார். 

மேலும் படிக்க | விழுந்தான் இடியாய்…எழுந்தான் மலையாய்… ஆரம்பிக்கலாமா..! ஒரு வருடத்தை நிறைவு செய்த விக்ரம்

பாலிவுட் நடிகர்களை ஓரம்கட்டிய அந்த தமிழ் நடிகர் வேறு யாருமில்லை, தமிழ் சினிமாவின் மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக விளங்கும் நமது தளபதி விஜய் தான்.  தமிழ் சினிமாக்களும், நடிகர்களும் அதிக பெருமைகளை பெற்று வரும் நிலையில், தற்போது தளபதி விஜய் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்கிற பெருமையினை பெற்றிருக்கிறார்.  48 வயதாகும் நடிகர் விஜய், சுமார் 27 வருடங்களாக தமிழ் திரையுலகில், சுமார் 66 படங்களில் கதாநாயகனாக நடித்து தன் பக்கம் கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருக்கிறார்.  நடிகர் விஜய்யை ரசிகர்கள் 'தளபதி' என்றும், 'தலைவா' என்றும், 'அண்ணன்' என்றும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அவரை 'ஜோ' என்றும் அழைத்து வருகின்றனர்.  தற்போது நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67-வது படமான 'லியோ' படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.  இந்த ஆக்ஷன் திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் பலரும் ஆர்வமாக காத்துகொண்டு இருக்கின்றனர்.  ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இப்படம் அக்டோபர் 19ம் தேதியன்று உலகளவில் வெளியாகி திரையரங்குகளை தெறிக்கவிட இருக்கிறது.

'லியோ' படத்தின் படப்பிடிப்பு பணிகளில் இருக்கும்போதே நடிகர் விஜய்யின் 68-வது படம் உறுதியாகிவிட்டது.  'தளபதி 68' படத்தை இயக்கப்போகும் இயக்குனர்களின் பட்டியலில் அட்லீ, கோபிசந்த் மலினேனி போன்ற பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் தற்போது வெங்கட் பிரபு 'தளபதி 68' படத்தை இயக்குவது உறுதியாகியுள்ளது.  ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ் உருவாகும் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க, படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.  இந்த படத்திற்காக நடிகர் விஜய்க்கு ரூ.200 கோடி சம்பளம் கொடுக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  இதுவரையில் இந்த தொகையினை எந்த இந்திய நடிகரும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   'தளபதி 68' படத்தில் எஸ்.ஜே.சூர்யாவை வில்லனாக நடிக்கவைக்க இயக்குனர் வெங்கட் பிரபு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  மேலும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவைக்க நயன்தாரா, தமன்னா, க்ரித்தி ஷெட்டி, கல்யாணி ப்ரியதர்ஷன் மற்றும் மிருணல் தாகூர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் 'தளபதி 68' படத்தில் நடிக்கப்போகும் அந்த முக்கியமான நடிகை யார் என்கிற அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | என்னது தல போய் கேட்டும் நோ சொல்லிட்டாரா விஜய்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News