விஷாலுக்காக யுவன் பாடிய பாடல்! விரைவில் ரிலீஸ்..!

வீரமே வாகை சூடும் திரைப்படத்தில் யுவன் சங்கர்ராஜா பாடியுள்ள பாடல் ஒன்று விரைவில் வெளியாக உள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 3, 2022, 02:44 PM IST
  • வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் சூட்டிங் நிறைவு
  • விஷால் நடித்து, தயாரித்துள்ள திரைப்படம் ’வீரமே வாகை சூடும்’
  • யுவன் பாடியுள்ள புதிய பாடல் விரைவில் ரிலீஸ்
விஷாலுக்காக யுவன் பாடிய பாடல்! விரைவில் ரிலீஸ்..! title=

நடிகர் விஷால் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’. து.பா.சரவணன் படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்ற படத்தின் சூட்டிங், இப்போது நிறைவுக்கு வந்திருப்பதாக விஷால் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பல கட்டங்களாக சூட்டிங் நடைபெற்ற நிலையில், எஞ்சிய காட்சிகள் கடந்த சில நாட்களாக படமாக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், டிவிட்டரில் வீரமே வாகை சூடும் படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ள விஷால், படத்தின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு, சூட்டிங் நிறைவு பெற்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

ALSO READ | மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கப்போகும் எஸ்.ஜே.சூர்யா!

மேலும், படத்தில் யுவன் சங்கர்ராஜா பாடிய பாடல் ஒன்றை விரைவில் வெளியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குடியரசு தினத்தையொட்டி ஜனவரி 26 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த விஷால், இப்போது பொங்கல் வெளியீடாக திரையிடுவதற்கும் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தியேட்டர்களில் 50 விழுக்காடு பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளன. இதனால், ஜனவரி 7 ஆம் தேதி ரிலீஸாக இருந்த இயக்குநர் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு வலிமை திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதனுடைய அப்டேட்டை படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதனால், பொங்கலுக்கு எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகும் என்பதில் குழப்பம் நீடித்து வருவதால், இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள விஷாலின் ’வீரமே வாகை சூடும்’ டீம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ALSO READ | ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையும் விஷால்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News