Valimai big update: வரும் வாரத்தில் வலிமை ட்ரெய்லர்

வலிமை திரைப்படம் தமிழ் மொழியில் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து திரையரங்குகளில் வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியானது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 26, 2021, 01:03 PM IST
Valimai big update: வரும் வாரத்தில் வலிமை ட்ரெய்லர் title=

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள 'வலிமை' படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா, குர்பானி நீதிபதி, சுமித்ரா, யோகி பாபு, அச்யுத் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "வலிமை" படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளிவந்து ரசிகர்களை உற்சாகமடைய செய்து வருகிறது. 

கொரோனா பெருந்தொற்று காலத்தில் இப்படத்தைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியேவராததால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். அதன்படி பலரும் இப்படம் குறித்த அப்டேட்டை எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் வலிமை (Valimai) படத்திலிருந்து முதல் சிங்கிள் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது, அதன் பிறகு இரண்டாவது பாடலும் வெளியாகி அதுவும் ரசிகர்களை இன்பமடைய செய்தது. 

ALSO READ | தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியாகும் 'வலிமை'!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படத்திலிருந்து வெளியான விசில் தீம் மியூசிக் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில் இந்த திரைப்படம் 2022 பொங்கல் பண்டிகையன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது. மேலும் வலிமை திரைப்படம் தமிழ் மொழியில் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து திரையரங்குகளில் வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியானது. 

இந்த நிலையில் தற்போது அஜித்தின் (Ajith) வலிமை படத்திலிருந்து அடுத்த வாரம் ட்ரெய்லர் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தகவல் வெளியான முதல் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர்.

ALSO READ | வலிமை படத்தின் விசில் தீம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News