இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்..எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?

Upcoming OTT Releases : ஓடிடியில் வாரா வாரம் பல புது படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த படங்களை'நாளை ஞாயிற்றுக்கிழமையில் வீட்டில் ஜாலியாக என்ஜாய் செய்து பார்க்களலாம். எனவே இந்த வாரம் ரிலீஸாகும் புது படங்கள் என்னென்ன என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 13, 2024, 12:44 PM IST
  • படத்தை எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்.
  • தியேட்டரில் படம் பார்க்க தவறியவர்கள் ஓடிடியில் பார்க்கலாம்.
இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்..எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்? title=

Upcoming OTT Releases : ஓடிடி தளங்களின் வருகையால், தியேட்டர்களில் வெளியாகும் புதுப்படங்களும் விரைவில் ஓடிடியில் வெளியாவது வழக்கமாகி வருகிறது. இதனால் தியேட்டரில் படம் பார்க்க தவறியவர்கள் கூட ஓடிடியில் குடும்பத்துடம் அமர்ந்து பார்க்கின்றனர். அந்த வகையில், இந்த வாரம் பல புது படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகிறது. அவை என்னென்ன என்பதையும், அவற்றை எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம் என்பதையும் இங்கு பார்ப்போம். 

பகலறியான்: தமிழில் பகலறியான் திரைப்படம் நேற்று ஓடிடியில் வெளியாகி உள்ளது. வெற்றி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை முருகன் என்பவர் இயக்கியிருந்தார். மே 24 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸான பகலறியான் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. எனினும் இந்த படம் ஆஹா தமிழ் தளத்தில் நேற்று வெளியாகியுள்ளது.

வைல்ட் வைல்ட் பஞ்சாப்: வருண் ஷர்மா, சன்னி சிங் மற்றும் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் நேற்று நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க நகைச்சுவையாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகியுள்ள டீன்ஸ் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

பில்: ரித்தேஷ் தேஷ்முக், நிம்ரித் கவுர், பவன் மல்ஹோத்ரா பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் நேற்று ஜியோ சினிமா தளத்தில் வெளியாகியுள்ளது.

ககுடா: சோனாக்ஷி சின்ஹா, ரித்தேஷ் தேஷ்முக், சாகிப் சலீம் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் காமெடி திரில்லர் படமாகும். இந்த திரைப்படம் நேற்று ZEE5 தளத்தில் வெளியாகியுள்ளது.

மகாராஜா: எப்போதுமே எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் விஜய்சேதுபதி தனது 50வது படமான மகாராஜா படத்திலும் ஸ்கோர் செய்திருந்தார். மகாராஜா ஜூன் 14 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய நிலையில், இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் நேற்று வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதியின் 50ஆவது படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அனுராக் காஷ்யப் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், நட்டி, சிங்கம் புலி, மம்தா மோகன்தாஸ், அபிராமி, முனிஷ்காந்த், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் நெட்ஃபிக்ஸ் தளத்தில் தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி உள்ளது.

பிற ஓடிடி ரிலீஸ் படங்களின் விவரம்:

ஆரம்பம் - தெலுங்கு - ஆஹா

ஹரோம் ஹரா - தெலுங்கு - ஆஹா

ஜிலேபி - தெலுங்கு - ஆஹா

மீன் கேர்ள்ஸ் - ஆங்கிலம் - அமேசான் ப்ரைம்

ப்ளாட் - தெலுங்கு - ஈடிவி

ஃபாஸ்ட் சார்லீ- ஆங்கிலம் - பிஎம்எஸ்

தி லாங் கேம் - ஆங்கிலம் - நெட்ஃபிக்ஸ்

மந்தாகினி - மலையாளம் - மனோரமா மேக்ஸ்

குயாங் - இந்தோனேசியன் - நெட்ஃபிக்ஸ்

36 டேஸ் - இந்தி - சோனி லிவ் தொடர்

அக்னி சாக்‌ஷி - தெலுங்கு - ஹாட்ஸ்டார் தொடர்

மீ - ஆங்கிலம் - ஆப்பில் டிவி தொடர்

ஒண்டு காண்டேயா கதே - கன்னடம் - நம்ம ஃப்ளிக்ஸ்

சன்னி - ஜப்பானிய மொழி படம் - ஆப்பிள் டிவி ப்ளஸ்

தி சாம்பியன் - ஸ்பானிஷ் - நெட்ஃபிக்ஸ்

தி பாக்கெட் வாட்ச் - ஆங்கிலம் - டிஸ்னி

எக்கம் - கன்னடம் - எக்கம் சேனல் 

டிவோர்ஸ் இன் தி பிளாக் - ஆங்கிலம் - ப்ரைம்

ப்ளேம் தி கேம் - ஜெர்மன் -நெட்ஃபிக்ஸ்

வேனிஷ்ட் இண்டு தி நைட்- இத்தாலிய மொழி படம் - நெட்ஃபிக்ஸ்

மேலும் படிக்க | தெலுங்கு ராம் சரணுடன் இணைந்த கர்நாடக சக்கரவர்த்தி சிவ ராஜ்குமார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ
 

Trending News