இந்திய இறையாண்மைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை -மும்பை ஐ கோர்ட்

Last Updated : Jun 13, 2016, 05:06 PM IST
இந்திய இறையாண்மைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை -மும்பை ஐ கோர்ட் title=

'உட்தா பஞ்சாப்' படத்தில் இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைக்கும் எவ்விதக் கருத்தும் இல்லை. ஒரு திரைப்படத்தின் கதைக்களம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் கருத்தாக்கச் சுதந்திரம் திரைப்பட இயக்குநர்களுக்கு இருக்கிறது' என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

'உட்தா பஞ்சாப்' படத் தலைப்பிலிருந்து பஞ்சாப் என்ற வார்த்தையை நீக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறும் போதை மருந்து புழக்கம் தொடர்பான படத்திற்கான தலைப்பில் `பஞ்சாப்` என்ற வார்த்தையை மட்டும் நீக்குவது நியாயமாகாது.

உட்தா பஞ்சாப்' படத்தில் இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைக்கும் எவ்விதக் கருத்தும் இல்லை. ஒரு திரைப்படத்தின் கதைக்களம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் கருத்தாக்கச் சுதந்திரம் திரைப்பட இயக்குநர்களுக்கு இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளது.

மேலும், "தணிக்கை வாரியத்தின் பணி படத்துக்குச் சான்றிதழ் வழங்குவதே தவிர, அதில் உள்ள காட்சிகளை வெட்டுவது அல்ல. இப்படம் வயது வந்தோருக்காக தயாரிக்கப்பட்டிருக்கிறது. எனவே ஒரு திரைப்பட இயக்குநருக்கு கட்டளையிடும் உரிமை தணிக்கை வாரியத்துக்கு இல்லை" என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Trending News