'உட்தா பஞ்சாப்' படத்தில் இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைக்கும் எவ்விதக் கருத்தும் இல்லை. ஒரு திரைப்படத்தின் கதைக்களம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் கருத்தாக்கச் சுதந்திரம் திரைப்பட இயக்குநர்களுக்கு இருக்கிறது' என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
'உட்தா பஞ்சாப்' படத் தலைப்பிலிருந்து பஞ்சாப் என்ற வார்த்தையை நீக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உட்தா பஞ்சாப் படத்துக்கு கட் கொடுத்த தணிக்கை வாரியத்துக்கு மும்பை உயர்நீதி மன்றம் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளது. அபிஷேக் சவுபே இயக்கத்தில் ஷாகித் கபூர் நடித்த படம் ‘உட்தா பஞ்சாப்'. போதைப்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை கொண்ட இந்த படத்தை அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் தயாரித்து உள்ளனர். இந்த படம் வரும் 17-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
அபிஷேக் சாவ்பே இயக்கியுள்ள `உட்தா பஞ்சாப்` திரைப்படம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. பஞ்சாப் மாநிலம் போதை மருந்து வசம் சிக்கியுள்ளது பற்றி விரிவாகச் சித்திரப்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. படத்தின் காட்சிகளில் 89 இடங்களில் கத்தரி போட வேண்டுமென்று சென்சார் வாரியம் முடிவெடுத்துள்ளது. மேலும் படத்தின் தலைப்பிலிருந்து ‘பஞ்சாப்’ என்ற வாரத்தையை அகற்றவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.