மனைவிக்கு வெங்காய கம்மல் பரிசளித்த பிரபல பாலிவுட் நடிகை

டிவிங்கிள் கண்ணாவுக்கு வெங்காய கம்மலை ரஜினிகாந்த் பட வில்லன் அக்‌ஷய்குமார் பரிசளித்து உள்ளார்.

Last Updated : Dec 13, 2019, 03:51 PM IST
மனைவிக்கு வெங்காய கம்மல் பரிசளித்த பிரபல பாலிவுட் நடிகை title=

டிவிங்கிள் கண்ணாவுக்கு வெங்காய கம்மலை ரஜினிகாந்த் பட வில்லன் அக்‌ஷய்குமார் பரிசளித்து உள்ளார்.

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. விலை ஏற்றம் அடைந்துள்ளதால் சில ஓட்டல்களில் வெங்காயத்தை அதிகமாக சேர்த்து செய்யப்படும் உணவு வகைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் விளைச்சல் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் வெங்காயம் விலை உச்சத்தில் இருக்கிறது.

சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 150 ரூபாயையும் தாண்டியது. இதனால் வெங்காய வரத்து இல்லாததால் எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிகளவு வெங்காயத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. 

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தனது மனைவிக்கு வெங்காயத்தை வைத்து கம்மல் செய்து  பரிசாக வழங்கி உள்ளார். இதனை டிவிங்கிள் கண்ணா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார். அது தற்போது வைரலாகி உள்ளது.

 

 

Trending News