அடுத்த 4 மாதங்களில் வெளிவர இருக்கும் டாப் ஹீரோ படங்கள்!

ஏப்ரல் மாத்திற்குள் தமிழில் டாப் ஹீரோக்களின் படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளன  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 23, 2021, 01:55 PM IST
அடுத்த 4 மாதங்களில் வெளிவர இருக்கும் டாப் ஹீரோ படங்கள்! title=

கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல வியாபாரங்கள் முடங்கின.  திரைப்படங்களும் வெளிவர முடியாமல் தள்ளி போகும் நிலைமை ஏற்பட்டது.  இதன் காரணமாக குறிப்பிட்ட தேதிகளில் படங்களை வெளியிட முடியவில்லை.  தற்போது கொரோனா தொற்று மெல்ல குறைந்து வருவதால் தள்ளி போன படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து வெளிவரும் நிலை ஏற்பட்டுள்ளது.  ஹாலிவுட்டில் கடந்த வருடமே வெளிவர வேண்டிய ஸ்பைடர் மேன் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளிவர உள்ளது.  

ALSO READ விரைவில் புதிய படத்தில் இணையும் விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின்!

தமிழில் டாப் ஹீரோக்களின் படங்கள் அடுத்தடுத்த மாதங்களில் வெளிவர உள்ளன.  விஜய், அஜித், சூர்யா, கமல், சிவகார்த்திகேயன், விக்ரம், தனுஷ் என்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் அனைத்தும் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் வெளிவர உள்ளது.  விஜய் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் பீஸ்ட் திரைப்படம் தற்போது படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.  ஏப்ரல் மாதத்தில் இப்படத்தினை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.  அதே மாதத்தில் விக்ரம் - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் விக்ரம் படமும் வெளிவர உள்ளது.  விஜய்சேதுபதி, பகத் பாசில் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கும் இந்த படம் பீஸ்ட் படத்துடன் மோத அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  

beast

அஜித் - வினோத் கூட்டணியில் எடுக்கப்பட்ட இரண்டாவது படமான வலிமை வரும் பொங்கல் அன்று திரையரங்கில் வெளிவர உள்ளது.  நீண்ட ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வரும் இப்படம் ரிலீஸ் தேதி கிடைக்காமல் தள்ளி போனது.  சமீபத்தில் இப்படத்தின் GLIMPSE வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.  சூர்யா - பாண்டிராஜ் கூட்டணியில் உருவான எதற்கும் துணிந்தவன் படம் வலிமை படத்துடன் மோத இருந்தது.  கடைசியில் பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.  சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த படம் சிவகார்த்திகேயனின் டாக்டர்.  அதன் பிறகு அவர் நடித்து வரும் DON திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளிவர உள்ளது.  

don

மணிரத்தினம் இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன்.  இந்திய சினிமாவில் உள்ள பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து உள்ளனர்.  இரண்டு பாகங்களாக வெளிவரும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளிவர உள்ளது.  தனுஷ் நடிக்கும் மாறன் மற்றும் விக்ரம் நடிக்கும் மகான் படங்கள் ஜனவரி - ஏப்ரல் மாதத்தில் வெளிவர உள்ளன.  இந்த இரண்டு படங்களும் நேரடியாக OTTயில் வெளிவர பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.  தெலுங்கிலும் RRR, புஸ்பா, ராதே சியாம் போன்ற பெரிய படங்களும் இந்த காலகட்டத்தில் வெளிவர உள்ளது.

ALSO READ வம்சி இயக்கும் விஜய் படத்தின் கதை இதுதான்! கசிந்த தகவல்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News