எப்போது பார்த்தாலும் சலிக்காத டாப் 10 Sci-Fi படங்கள்!

குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் அமைந்த திரைப்படங்கள் மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும்.  இந்த ஜானரில் நிறைய படங்கள் வந்தாலும் சில படங்கள் தான் மனதில் நிலைத்து நிற்கும்.  

Written by - RK Spark | Last Updated : Apr 9, 2023, 07:02 AM IST
எப்போது பார்த்தாலும் சலிக்காத டாப் 10 Sci-Fi படங்கள்! title=

1) பாம்ப்ஹாட்: ராகவேந்திர வர்மா இயக்கத்தில் 2020-ம் ஆண்டில் வெளியான ஒரு சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் தான் 'பாம்ப்ஹாட்'.  துரதிர்ஷ்டம் மிக்க, எப்போதும் தோல்வியையே தழுவும் ஒரு இளம் ரோபோட்டிக்ஸ் பொறியாளர் எப்படி வெற்றிபெறுகிறார் என்பது தான் இப்படத்தின் கதை.  தெலுங்கு மொழியில் வெளியான இந்த படத்தில் சாய் சுஷாந்த்,  சாந்தினி சௌத்ரி,  சிம்ரன் சௌத்ரி,  பிரியதர்ஷி புலிகொண்டா, மகரந்த் தேஷ்பாண்டே போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

2) டிக் டிக் டிக்: சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் 2018-ம் ஆண்டில் வெளியான சயின்ஸ் பிக்ஷன் த்ரில்லர் படம் தான் 'டிக் டிக் டிக்'.  1988-ம் ஆண்டு வெளியான அமெரிக்க திரைப்படமான ஆர்மகெடானில் இருந்து எடுக்கப்பட்டது.  மாயாஜாலம், வான்வெளி சாகசம் என படம் பார்ப்பதற்கு சிறப்பான அனுபவத்தை தரும்.  இந்த படத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஆரோன் அஸீஸ், ரமேஷ் திலக், அர்ஜுனன், வின்சென்ட் அசோகன் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

3) ஸ்ரீவள்ளி: விஜயேந்திர பிரசாத் இயக்கத்தில் 2017ம் ஆண்டில் தெலுங்கு மொழியில் வெளியான சயின்ஸ் பிக்ஷன் த்ரில்லர் படம் தான் 'ஸ்ரீவள்ளி'.  மூளை அலை தூண்டுதலை பரிசோதனை செய்யும் ஒரு நரம்பியல் நிபுணரை சுற்றி இப்படத்தின் கதை நகர்கிறது.  இப்படத்தில் நேஹா ஹிங்கே, ராஜத் கிருஷ்ணா, ராஜிவ் கணகலா, ஹேமா போன்ற பலர் நடித்துள்ளனர்.

மேலும் படிக்க | பிரபல நடிகருக்கு தொடரும் கொலை மிரட்டல்... பாதுகாப்புக்கு வெளிநாட்டு கார் - என்ன ஸ்பெஷல்?

4) நன்னி: எந்த காலத்திலும் பார்ப்பதற்கு ஏற்ற சிறப்பான சயின்ஸ் பிக்ஷன் படமாக 'நன்னி' படம் உள்ளது.  இப்படம் இன்றைய காலத்தில் மருத்துவ துறையில் தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளது மற்றும் எந்தளவு முக்கியமான பங்கினை வகிக்கிறது என்பதை மையமாக வைத்து த்ரில் அனுபவத்தை தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

5) ரோபோ 2.0: ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான 2.0 படம் சிறந்த 3டி சயின்ஸ் பிக்ஷன் ஆக்ஷன் படமாகும்.  தீய சக்தியை மனிதனால் உருவாக்கப்பட்ட ரோபோ எப்படி அழித்து மக்களை காப்பாற்றுகிறது என்பதை இப்படம் விவரிக்கிறது.  இப்படத்தில் அக்ஷய் குமார், எமி ஜாக்சன், சுதன்ஷு பாண்டே போன்ற பலர் நடித்துள்ளனர்.

6) நைன்(9): ஜேனுஸ் முகமது இயக்கத்தில் 2019ம் ஆண்டு வெளியான சயின்ஸ் பிக்ஷன் ஹாரர் படம் '9'.  9 நாட்களுக்கு பூமியில் வெளிச்சமோ, மின்சாரமோ அல்லது எவ்வித சாதனங்களுமோ இல்லாமல் மக்கள் எப்படி தவிக்கிறார்கள் என்பதை இந்த மலையாள மொழி படம் காட்டுகிறது.  இப்படத்தில் பிரித்விராஜ், விஷால் கிருஷ்ணா, பிரகாஷ் ராஜ், மம்தா மோகன்தாஸ் போன்ற பலர் நடித்துள்ளனர்.

7) 24: விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சயின்ஸ் பிக்ஷன் ஆக்ஷன் படம் தான் .24'.  கைக்கடிகாரத்தை வைத்து விருப்பப்படும் காலத்திற்கு பயணம் செய்வதை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.  இப்படத்தில் நித்யா மேனன், சமந்தா, சரண்யா பொன்வண்ணன், அஜய், சத்யன் போன்ற பலர் நடித்துள்ளனர்.

8) டாக்சிவாலா: ராகுல் சங்கரித்யன் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியான சூப்பர்நேச்சுரல் காமெடி த்ரில்லர் படம் 'டாக்சிவாலா'.  அறிவியல் மற்றும் அமானுஷ்ய நிகழ்வுகளின் கலவையாக வெளிவந்த இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா, மாளவிகா நாயர், ப்ரியங்கா ஜவால்கர், மதுநந்தன், ரவி வர்மா போன்ற பலர் நடித்துள்ளனர்.

9) ரெட் ரெயின்: ராகுல் சதாசிவன் இயக்கத்தில் 2013ம் ஆண்டு வெளிவந்த சயின்ஸ் பிக்ஷன் த்ரில்லர் படம் தான் 'ரெட் ரெயின்'.  கேரளாவில் ஜூலை மற்றும் செப்டெம்பர் மாதங்களுக்கு இடையில் பொழிந்த சிவப்பு மழையை அடிபப்டையாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.  உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் நரேன், மோகன் சர்மா, ரூபியா, சச்சின் சதாசிவன் போன்ற பலர் நடித்துள்ளனர்.

10) சதுர் முகம்: ரஞ்சித் கமலா சங்கர் சலீல் இயக்கத்தில் 2021ம் ஆண்டு வெளிவந்த அறிவியல் ஹாரர் த்ரில்லர் படம் தான் 'சதுர் முகம்'.  ஒரு புதிய மொபைலை வாங்கிய பிறகு அந்த பெண் என்ன நிலைக்கு ஆளாகிறாள் என்பதை இந்த படம் திகிலோடு காட்டுகிறது.  இப்படத்தில் மஞ்சு வாரியார், சன்னி வாய்னே, நிரஞ்சனா அனூப் போன்ற பலர் நடித்துள்ளனர்.

மேலும் படிக்க | சினிமாவில் காலடி எடுத்து வைத்த வெங்கட் பிரபுவின் மகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News