அதிர்ச்சி! துணிவு பட நடிகர் திடீர் மரணம்..ஷாக்கில் ரசிகர்கள்!

Rituraj Singh Death: துணிவு படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த, ரிதுராஜ் சிங் என்ற நடிகர் உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Feb 20, 2024, 05:23 PM IST
  • துணிவு படத்தில் நடித்தவர் ரிதுராஜ்
  • பல டெலிவிஷன் தொடர்களில் நடித்துள்ளார்
  • மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
அதிர்ச்சி! துணிவு பட நடிகர் திடீர் மரணம்..ஷாக்கில் ரசிகர்கள்! title=

Thunivu Movie And Anupama Serial Actor Rituraj Singh Death: ஹெச்.வினோத் இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், துணிவு. இந்த படத்தில் அஜித்குமார் ஹீரோவாக நடிக்க, அவருடன் இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் மஞ்சு வாரியர், பாவனி, அமீர் ஆகியோர் நடித்திருந்தனர். முக்கிய வில்லனாக, மலையாள நடிகர் ஜான் கொக்கன் நடித்திருந்தார். இந்த படத்தில் மக்கள் பணத்தை திருடிய பணக்கார வில்லன்களுள் ஒருவராக நடித்திருந்தவர், ரிதுராஜ் சிங் ()Rituraj Singh). 

துணிவு படத்தில் ரிதுராஜ் சிங்:

துணிவு படத்தின் கதைப்படி, மக்கள் பணத்தை கொள்ளையடித்து வங்கியில் பதுக்கி வைத்திருக்கும் பணக்கார வில்லன்களாக மூன்று பேர் நடித்திருப்பர். இதில், படத்தின் ஆரம்ப காட்சியில் கடத்தப்பட்டு, கடைசியில் உள்ளாடையுடன் உட்கார வைக்கப்படும் வில்லனும் ஒருவர். இந்த கதாப்பாத்திரத்தில் ரிதுராஜ் சிங் என்பவர் நடித்திருந்தார். பாலிவுட் நடிகரான இவர், இன்னும் சில தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார்.

திடீர் மரணம்!

ரிதுராஜிற்கு, வயது 59 ஆகிறது. இவர், கணையத்தில் பிரச்சனை காரணமாக (Pancreatic Illness) சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், அவர் இன்று (பிப். 20) திடீரென மாரடைப்பு மரணமடைந்துள்ளார். 

பாலிவுட் நடிகர் ரிதுராஜ் இறந்துள்ள செய்தியை அவரது நெருங்கிய நண்பர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஊடகத்தாரிடம் பேசுகையில், இவர் நேற்று இரவு 2:30 மணியளவில் உயிரிழந்ததாக கூறியுள்ளார். மேலும், 15 நாட்களுக்கு முன்னர் கணையத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் சமீபத்தில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். ரிதுராஜ், நேற்றில் இருந்தே மிகவும் சோர்வாக இருந்ததாகவும்  உடனடியாக மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றதாகவும் கூறியிருக்கிறார். மருத்துவமனையில்தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் ரிதுராஜின் நண்பர் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | மேஜர் முகுந்தாக சிவகார்த்திகேயன்.. அமரன் படம் குறித்து மேஜர் முகுந்த் மனைவி நெகிழ்ச்சி

Ruturaj Singh

பிரபல பாலிவுட் சீரியல் நடிகர்..

நடிகர் ரிதுராஜ், இந்தியில் பிரபலமாக இருக்கும் ‘அனுபமா’ என்ற தொடரில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்து வந்தார். இவரது கதாப்பாத்திரத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ள செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

தொகுப்பாளர்..

நடிகர் ரிதுராஜ், பல டெலிவிஷன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். இந்தியில் பிரபலமாக இருந்த சி.ஐ.டி என்ற த்ரில்லர் தொடர், தமிழிலும் டப் செய்யப்பட்டு ஹிட் அடித்தது. அந்த தொடரிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். வயதானலும் கட்டுடலுடன், க்ளாஸ் ஸ்டைலுடன் இருக்கும் இவருக்கு பாலிவுட்டை தாண்டி தென்னிந்தியாவிலும் ரசிகர்கள் இருந்தனர். ரிதுராஜ்ஜின் நடிப்பில் ‘இந்தியன் போலீஸ் ஃபோர்ஸ்’ என்ற வெப் தொடரும் உருவாகியுள்ளது. இதில் அவர் ரஃபீக் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ரிதுராஜ்ஜின் இறப்பிற்கு அவரது ரசிகர்களும், திரையுலகினரும், சின்னத்திரை நடிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | “மியூசிக் பாேட்டா ச்சீ தூன்னு சொல்லுவாரு..” இளையராஜாவின் இன்னொரு முகத்தை கூறிய கார்த்திக் ராஜா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News