இந்த வாரம் ரிலீஸாகும் விக்ரம், விஜய் சேதுபதி திரைப்படங்கள்..!

விக்ரமின் ’மகான்ய ஓடிடி ரிலீஸ் உட்பட மொத்தம் 6 திரைப்படங்கள் இந்தவாரம் ரிலீஸாக உள்ளன

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 6, 2022, 05:04 PM IST
இந்த வாரம் ரிலீஸாகும் விக்ரம், விஜய் சேதுபதி திரைப்படங்கள்..! title=

மகான்

பிப்ரவரி 10-ந்தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது 'மகான்'. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ளனர். நடிகை சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

ALSO READ | லதா மங்கேஷ்கர் திருமணம் செய்துகொள்ளாதது ஏன்?

எப்ஐஆர்

கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மனு ஆனந்த் இயக்கியுள்ள திரைப்படம் எப்.ஐ.ஆர்.  லீட் ரோலில் விஷ்ணு விஷால் மற்றும் மஞ்சிமா மோகன் நடித்துள்ளனர். இவர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரைசா வில்சன், ரேபா மோனிகா நடித்திருக்கும் இந்த திரைப்படம் பிப்ரவரி 11 ஆம் தேதி ரிலீஸாகிறது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

கடைசி விவசாயி

கடந்த 2015-ஆம் வருடத்தில் வெளியான காக்கா முட்டை திரைப்படத்தை இயக்கிய,  மணிகண்டன், கடைசி விவசாயி என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இதில் நடிகர் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட இப்படம் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. வரும் 11 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூர்மன்

ஜனனி, பாலசரவணன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கூர்மன்'. சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தை எம் என்டர்டைமெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இயக்குநர் பிரையன் ஜார்ஜ் இயக்கியுள்ளார். டோனி பிரிட்டோ இசையமைத்துள்ளார். வரும் 11 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

ALSO READ | கானக்குயில் லதா மங்கேஷ்கர்; தமிழிலும் ஒலித்த ’வளையோசை’ நின்றது!

இந்தப் படங்களைத் தவிர அஷ்ட கர்மா மற்றும் விடியா இரவொன்று வேண்டும் ஆகிய திரைப்படங்களும் வரும் 11 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Trending News