இனி பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடிக்க போவது யார் தெரியுமா?
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் (Pandian Stores) தொடரில் இனி முல்லையாக அவரது தோழியும், நடிகையுமான சரண்யா துராடி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், சித்துவின் (VJ Chitra) இடத்தில் யாரையும் பொருத்திப் பார்க்க மனசு வராமல் ரசிகர்கள் தொடர்ந்து சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த VJ சித்ரா (VJ Chitra) திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து இருக்கும் நேரத்தில் அந்த சீரியலில் இருந்து அவருக்கு பதிலாக அவரது நெருங்கிய தோழியான சரண்யா துராடி (Sharanya Turadi) முல்லை கதாப்பாத்திரத்தில் நடைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ALSO READ | VJ சித்ரா தற்கொலைக்கு காரணம் யார்?: காவல்துறை விசாரணையில் அம்பலம்!
ஆனாலும் இவரது இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வரும் ரசிகர் இந்த தொடரில் சித்துவை தவிர வேறு யாராலயும் எங்கள் முல்லையாக (Mullai) பார்க்கவும் முடியாது, ஏற்றுக்கொள்ளவும் முடியாது என்று கூறி வருகின்றனர். இந்த தொடரின் நிலையை எண்ணி நிர்வாகமும் இந்த மாதிரி ஒரு முடிவை எடுத்திருப்பதாக ரகசியங்கள் வெளியாகி உள்ளது.
கடந்த புதன் கிழமை சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் சின்னத்திரை நடிகை சித்ரா (VJ Chitra) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். நடிகை சித்ராவின் மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், பிரேத பரிசோதனையின் முதல் கட்ட தகவலின்படி சித்ரா தற்கொலை தான் செய்துக்கொண்டதாக காவல்ததுறை தகவல் தெரிவித்தது. மேலும், சித்ராவின் கன்னத்தில் இருந்த நகக்கீறல் அவருடையது தான் என்றும் காவல்துறை தெரிவித்தது.
ALSO READ | சித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கை விவரங்கள் வெளியீடு!
இந்நிலையில், நடிகை சித்ரா தற்கொலைக்கு கணவர், தாய் என இரண்டு தரப்பிலும் கொடுத்த மன அழுத்தமே காரணம் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கணவர் ஹேம்நாத் குடித்துவிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்று சித்ராவிடம் பிரச்னை செய்துள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR