மறைந்த நடிகர் விவேக் குடும்பத்தினருக்கு தளபதி விஜய் ஆறுதல்!

ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் விஜய் விவேக் வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 26, 2021, 04:35 PM IST
மறைந்த நடிகர் விவேக் குடும்பத்தினருக்கு தளபதி விஜய் ஆறுதல்! title=

கடந்த ஏப்ரல் 16-ம் தேதி காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் நடிகர் விவேக் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் மறுநாள் அதிகாலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார்.

விவேக்கின் (Vivekh) மறைவு திரைத்துறையினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. திரையுலகினர் பலரும் அவரது மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். ஆனால் நடிகர் விஜய் ஜார்ஜியாவில் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் விவேக்கின் இறுதி அஞ்சலிக்கு வரமுடியவில்லை. 

இந்நிலையில் நேற்று ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் விஜய் (Vijay) இன்று விவேக்கின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தனது இரங்கல் தெரிவித்துள்ளார். இத்தகவலை அவரது மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது உறுதிப்படுத்தியுள்ளார்.

ALSO READ | சமூக பொறுப்பு, அரசின் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு முன்னின்ற நடிகர் விவேக் நேற்று காலமானார்.

கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான பிகில் படத்திலும் நெஸி என்ற கதாப்பாத்திரத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார் விவேக். விஜய், விவேக் வீட்டிற்கு சென்ற தகவலை #ThalapathyVijay ஹேஷ்டேக்குடன் விஜய் ரசிகர்கள் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

மாஸ்டர் படத்தை அடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். தற்காலிகமாக ‘தளபதி 65’ என்று அழைக்கப்படும் இந்தப் படத்தில் மலையாள நடிகை அபர்ணா தாஸ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் நேற்று சென்னை திரும்பினார் நடிகர் விஜய். 

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News