விலை உயர்ந்த வைர மோதிரத்திற்கு சொந்தக்காரியான தமன்னா..? யார் கொடுத்த பரிசு இது..?

Tamannaah Bhatia Diamond Ring: நடிகை தமன்னா, சமீபத்தில் கையில் பெரிய ஜிகு ஜிகு மோதிரம் அணிந்தது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்துருந்தார். இது விலை உயர்ந்த வைர மோதிரம் என்றும் இதன் விலை பல கோடி பெரும் என்றும் தகவல்கள் வெளியாகின.   

Written by - Yuvashree | Last Updated : Jul 26, 2023, 03:56 PM IST
  • ஜெயிலர் பட நாயகி தமன்னா சில நாட்களுக்கு முன்னர் ஒரு மோதிரத்தை அணிந்தவாறு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
  • இது வைர மோதிரம் என்றும், இதன் விலை பல கோடி ரூபாய் என்றும் தகவல்கள் வெளியானது.
  • இது குறித்து தமன்னா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
விலை உயர்ந்த வைர மோதிரத்திற்கு சொந்தக்காரியான தமன்னா..? யார் கொடுத்த பரிசு இது..? title=

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று திரையுலகிலும் முன்னணி நடிகையாக திகழ்பவர் தமன்னா. இவர், தனது இன்ஸ்டா பக்கத்தில் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இது பெரும் பேசுபொருளாக மாறியது.

தமன்னா:

தமிழ் சினிமாவில் கேடி, கல்லூரி, போன்ற படங்கள் மூலம் அனைவருக்கும் தெரிந்த முகமாக மாறிய நடிகை தமன்னா. இவர், 2010 முதல் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்கிறார். முதன் முதலில் பாலிவுட் மூலம் சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுத்தாலும் இவருக்கு தமிழ் சினிமாதான் தகுந்த வாய்ப்புகளை அளித்தது. அதன் பிறகு இவர் தெலுங்கு படங்களிலும் நடிக்க தொடங்கினார். தமன்னா, தற்போது இந்தி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தமன்னா, ரஜினிகாந்துடன் இணைந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம், அடுத்த மாதம் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

பேசுபொருளான புகைப்படம்..

தமன்னா, சில நாட்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கையில் பெரிய கல் வைத்த மாேதிரம் அணிந்துள்ளது போன்ற புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இது, உலகிலேயே ஐந்தாவது பெரிய வைரம் என்றும், இதன் விலை ரூபாய் இரண்டு கோடி என்றும் தகவல் வெளியானது. ஒரு தரப்பினர், இந்த மோதிரத்தை தமன்னாவின் காதலர் விஜய் வர்மா பரிசளித்திருப்பார் எனக்கூற, இன்னொரு தரப்பினர் வேறு ஒரு கதையை கூறினர். பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா, தமன்னாவிற்கு இந்த மோதிரத்தை பரிசாக கொடுத்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், தமன்னா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். 

மேலும் படிக்க | ‘மாவீரன்’ திருட்டுக்கதையா..? இயக்குநர் மீது பாயும் சர்ச்சை…!

‘அய்யோ..அப்படியெல்லாம் இல்ல..’

தமன்னாவின் மோதிரம் குறித்த தகவை ஒரு இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். அதில், உபாசனாதான் தமன்னாவிற்கு இந்த மோதிரத்தை பரிசளித்திருந்தார் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் பகிர்ந்துள்ள தமன்னா, “அது மோதிரமே இல்லை. பளபளப்பாக பாட்டில் ஓப்பனர். அதனுடன் நான் எடுத்த போட்டாேதான் இது..” என நகைச்சுவையாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து, இந்த “மோதிரம்” குறித்து பரவிய பொய்யான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

இரண்டு சூப்பர் ஸ்டார்களுடன் தமன்னா..!

நடிகை தமன்னா, தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளது போலவே, தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவியுடனும் ஒரு படத்தில் நடித்துள்ளார். தமிழில் அஜித் நடிப்பில் வெளியான ‘வேதாளம்’ திரைப்படம், தெலுங்கில் ‘போலா ஷங்கர்’ என்ற பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க வரவேற்பினை பெற்றது. இந்த படத்தில், தமிழில் ஸ்ருதி ஹாசன் நடித்திருந்த கதாப்பாத்திரத்தில் தெலுங்கில் தமன்னா நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இவருடன் இணைந்து கீர்த்தி சுரேஷூம் நடித்துள்ளார். ராஷ்மி கெளதம், முரளி ஷர்மா ஆகியோரும் இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். 

ஆபாச தொடரில் தமன்னா..? 

சமீப காலங்களில் படங்களில் மட்டுமல்லாது இந்தி தொடர்களில் நடிப்பதிலும் தமன்னா கவனம் செலுத்தி வருகிறார். காமெடி-காதல் நிறைந்த ஜீகர்தா என்னும் தொடரில் சமீபத்தில் தமன்னா நடித்திருந்தார். அதில் மேலாடையின்றி சில காட்சிகளிலும் முத்தக்காட்சிகளிலும் அவர் நடித்திருந்தார். தமன்னா நடித்திருந்த இந்த தொடர் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து பேசினர். இதையடுத்து இவர் நடித்திருந்த ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ என்ற தொடர் வெளியானது. இதிலும் தமன்னா கொஞ்சம் கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். இதுவும் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியது. இனி வரும் காலங்களிலும் அவர் இது போன்ற கதாப்பாத்திரங்களிலேயே நடிப்பார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | குக் வித் கோமாளி: பட்டத்தை வென்றவருக்கு இத்தனை லட்சம் பரிசுத்தொகையா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News