Tamannaah Bhatia Diamond Ring: நடிகை தமன்னா, சமீபத்தில் கையில் பெரிய ஜிகு ஜிகு மோதிரம் அணிந்தது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்துருந்தார். இது விலை உயர்ந்த வைர மோதிரம் என்றும் இதன் விலை பல கோடி பெரும் என்றும் தகவல்கள் வெளியாகின.
உத்திர பிரதேசம் மீரட்டை சேர்ந்த நகை வியாபாரி ஹர்ஷித் பன்சல் 12,638 வைரங்கள் பதித்த மேரிகோல்ட் (Marigold) என்ற மோதிரத்தை வடிவமைத்துள்ளார். இது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
மீரட்டில் ரெனானி நகைக் கடையை வைத்திருக்கும் பன்சல், தான் பெரும்பாலும் பிரத்யேக நகைகளை தயாரிப்பதை நோக்கமாகக் கொண்டவர் என்றும், இந்த வடிவமைப்பு சவாலாக இருந்தது என்றும் கூறினார்.
உலகளவில் அதிக வெட்டுக்களை கொண்ட வைர மோதிரம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. இந்த மோதிரம் 6,690 வெட்டுக்களை கொண்டது. தற்போது இந்த மோதிரம் குஜராத்தில் ஏலம் விடப்படவுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.