‘அஜித்-61’ : கதை பிறந்த பின்னணி இதுதான்! 3ஆவது முறையாக க்ரீன் சிக்னல்!

இப்படத்துக்காக அஜித் கடுமையாக உடல் எடையைக் குறைக்கவுள்ளதும் முற்றிலும் ஸ்டைலிஸான தோற்றத்தில் அவர் நடிக்கவுள்ளதும் பலரும் அறிந்ததே.

Last Updated : Apr 7, 2022, 05:17 PM IST
  • இப்படத்துக்காக அஜித் கடுமையாக உடல் எடையைக் குறைக்கவுள்ளாராம்
  • இயக்குநர் வினோத்துடன் 3ஆவது முறையாக இணைகிறார் நடிகர் அஜித்
  • அஜித்- 62 படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்
‘அஜித்-61’ : கதை பிறந்த பின்னணி இதுதான்! 3ஆவது முறையாக க்ரீன் சிக்னல்! title=

விஜய்யின் பீஸ்ட் ரிலீஸாவதற்கு முன்பாகவே அவரது அடுத்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டது. விஜய்யின் 66ஆவது படமான இப்படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தனா மற்றும் சரத்குமாரும் இணைந்துள்ளனர். விஜய் படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளதையடுத்து பலரது கவனமும் தற்போது அஜித் -61 பக்கம் திரும்பியுள்ளது.

வலிமை படம் ரிலீஸாகி 2 மாதம் ஆகியுள்ள நிலையில் அஜித்-61 படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. ஐதராபாத்தில் சென்னை மவுண்ட் ரோடு போல செட் போடப்பட்டுள்ளதாகவும் விரைவில் ஷூட்டிங் நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், அஜித் முதற்கட்டப் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் 2 வாரங்கள் கழித்தே படக்குழுவுடன் இணையவுள்ளாராம். இப்படத்துக்காக அஜித் கடுமையாக உடல் எடையைக் குறைக்கவுள்ளதும் முற்றிலும் ஸ்டைலிஸான தோற்றத்தில் அவர் இதில் நடிக்கவுள்ளதும் பலரும் அறிந்ததே.

                                                  Ajith

மேலும் படிக்க | முன்னணி நடிகர்களுக்குக் குறிவைக்கும் உதயநிதி!

அதேபோல அஜித் இப்படத்தில் வில்லத்தனமான புரொஃபசர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அஜித் 61 கதையைப் பொறுத்தவரை, இயக்குநர் ஹெச்.வினோத் அஜித்துக்கு முதன்முதலாக சொன்ன கதை இதுதானாம். ஆனால் அதை எடுக்காமல்தான் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்கள் எடுக்கப்பட்டதாம். 

இரு படங்களும் முடிக்கப்பட்ட நிலையில்தான் தற்போது அந்தக் கதையை படமாக்கவுள்ளார்களாம். வலிமையைப் போல அல்லாமல் இப்படத்தை சீக்கிரமே முடித்துக்கொண்டு அடுத்த படத்துக்குத் திரும்பவுள்ளார் அஜித். அஜித்தின் 62ஆவது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அதிக தியேட்டரில் ரிலீசாகும் முதல் படம்: ரெக்கார்டுகளை அடித்து நொறுக்கும் பீஸ்ட்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News